பக்கம்:தரங்கிணி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

6i

கன்னிகை போலவே காட்சியளித்தாள். அவள் நடை யழகை ரசித்துக் கொண்டிருந்த அவன், தரங்கிணி தங்கள் வீட்டைக் கடந்து செல்வதைக் கண்டு பதற்ற முறலானன். "ஏ இசைவாணி கிண்கிணி! இங்கு வரா மல் எங்கே போகிருய்? உன் தோழி காதரீனைப் பார்க்க வரவில்லையா? அவள் உன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிருளே?' என்று, அவன் குரல் கொடுத்தான். குறும்பு தொனிக்கும் அக் குரலேக் கேட்டதும், தரங்கிணி மந்திரத்தால் கட்டுண்டு நிற்கும் பாம்புபோல், அப்படியே நின்று விட்டாள். ஜோஸப் அவளே உரக்கக்கூடக் கூப்பிட வில்லை. அவன் தகப்பனர் வீட்டினுள் இருந்ததால், தான் அவளே அழைப்பது அவர் செவியில் விழுந்துவிடப் போகிறது என்ற அச்சத்தால், அவன் மெல்லவே குரல் கொடுத்துக் கூப்பிட்டான். ஆனாலும் அவன் இசைவாணி, கிண்கிணி என்று விளித்ததில், கிண்கிணி என்று அவன் அவளைக் காணும் போதெல்லாம் இட்டு அழைக்குஞ் செல்லப் பெயர் அவள் காதில் எப்படியோ விழுந்து விட்டது. ஆகவே, அவள் திடுக்கிட்டு நின்று, தன்னையறி யாமலே திரும்பிப் பார்த்தாள். அப்போதுதான் அவளுக் குத் தன் மெல்லடிகள் செய்துவிட்ட தவறு தெரிந்தது. அடுத்த கணம் அவள், தன்னைச் சுதாரித்துக்கொண்டு பின்னுக்கு நடந்து வந்து, காதரீன் வீட்டினுள் நுழைந் தாள். - - х

தான் வருஞ் சமயத்தில், ஜோஸப் அங்கு இருப்பான் என்று தரங்கிணி எதிர்பார்க்கவில்லை. இந்த நேரத்தில் அவன் வேலைசெய்யும் அலுவலகத்தில் இருக்கவேண்டி யவ்ன். இன்று வழக்கத்துக்கு மாக அவன் இருந்தது, அவளுக்கு அதிர்ச்சியைத் தந்தது, அவன் அவளைக் காணும்போதெல்லாம் ஏதாயினும் கிண்டல் செய்வதால், தரங்கிணி அவன் கண்களில் படாமல் இருக்க வெகுவாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/62&oldid=1338478" இலிருந்து மீள்விக்கப்பட்டது