பக்கம்:தரங்கிணி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

63.

அவளது இச் சொற்கள், கன்னத்தில் அறைவதுபோல் ஜோஸப்பின் செவிகளில் விழுந்தன. அவன் அதிர்ந்தே போளுன். ஆனாலும், தான் அவளுக்குப் பயந்து போனதாக அவள் அறிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடன், விரைப்பாகப் பேசலானன்:

"என்ன பாடகியம்மாளுக்கு இன்று நாக்கு ரொம்ப நீளுகிறது?”

இதற்குள் நடைக்குப் போய்விட்ட தரங்கிணி, ஜோஸபின் கரகரத்த குரலைக் கேட்டுச் சடக்கெனத் திரும்பி வந்து, அவன் காது கேட்கும்படியான தூரத்தில் நின்று, "எனக்கு நாக்கு நீளுகிறதா? உனக்கு நீளமானதா? என்று நான் போனபின்னர் நீயே நினைத்துப்பார். அது மட்டுமல்ல, ஒரு வயதுப்பெண்ணிடம் முகத்தில் மீசை அரும்பிவிட்ட ஒரு வாலிபன் இவ்விதமெல்லாம் வம்புப் பேச்சுப் பேசலாமா என்றும் சாவதானமாகச் சிந்தித்துப் பார். உன் மூளைக்கே எட்டும்' என்ருள்.

இப்போது படபடவென்ற ஒசையுடன் சில நிமிடங்கள் மழை பெய்துவிட்டு நின்றது.

"உன்னைப்போல் வாலிபர்கள் இருக்கிருர்களே, அவர்கள் எல்லாம் இப்படியா இளம் பெண்களிடம் வம்பு அளக்கிருர்கள்? பரிகாசம் பண்ணுகிருர்கள்?' என்று சிற்றத்துடன் சொல்லத் தொடங்கிய தரங்கிணி,"வெளியே உதாரணம் தேடப்போவானேன்? உங்க வீட்டிலேயே உன்னைப்போல ஆண்பிள்ளே உன் பெரிய அண்ணன் இருக் கிருரே; அவர் என்னைப்போன்ற பெண்களைக் கண்டால் எப்படி நடந்து கொள்ளுகிருர் என்பதை நீ ஒரு தடவையா யினும் பார்த்ததில்லையா? அவர் பெண்களை எதிரிட நேர்ந் தால், அவர்கள் அவரைப் பார்த்துத் தலைகுனிந்து கொண்டு ஒதுங்கி போவதற்குமுன், தான் தலையைக் கவிழ்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/64&oldid=1338480" இலிருந்து மீள்விக்கப்பட்டது