பக்கம்:தரங்கிணி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

64.

கொண்டு, அவர்கள் பார்வையிலிருந்து விரைந்துபோய் விடுகிரு.ர். அப்பேர்ப்பட்ட உத்தமருடன் நீயும் வந்து பிறந் திருக்கிருயே?”

கம்மா அளக்காதே, பெண்ணே! எல்லாம் எனக்குத் தெரியும்..." -

ஜோஸப் கடித்துக் குதறிவிடுவதுபோல் கூறினன். "எல்லாம் தெரிந்து பேசுகிற லட்சணமா இது? நான் உனக்குச் சொல்லி வைக்கிறேன் இன்று. இதுவரை என்னைப் பார்த்துப் பரிகாசம் பேசி வந்ததுபோல், இனி நீ ஏதா யினும் குறும்பாகப் பேசினால், மரியாதை கெட்டுவிடும், ஆமாம், நான் கண்டிப்பாகக்கெட்டவளாய் விடுவேன்...... ஜாக்கிரதை' -

கனச்ாரீரம் வாய்ந்த பாடகர் சங்கீதக் கச்சேரி செய் யும்போது வந்து விழும் சங்கதிகளைப்போல, அவளுடைய மெல்லிய குரல் கனத்து, வார்த்தைகள் சூடேறி வெளி வந்தன. .

ஜோஸப் இப்போது உண்மையில் நடுங்கியே போனன். தரங்கிணி இதுவரை இப்படிக் கடுமையாக யாருடனும் பேசி அவன் கேட்டதில்லை. அவள் தனித்துத் தன் எதிர்ப்படும்போதெல்லாம், அவன் எக்கச்சக்கமாக ஏதோ ஏளனமாகப் பேசி அழக்கூட வைத்திருக்கிருன். அப்போதெல்லாம், ஒரு முறைகூட அவனை ஏறிட்டுப் பார்த்ததில்லை; எதிர்த்து ஒன்றும் பேசியதில்லை; அப்பேர்ப் பட்டவள் இன்று...!

"என் சிநேகிதியுடன் பிறந்தவனயிற்றே என்று தாட் சணியங் காட்டிவிட்டுப் பேசாமல் போகப்போக நீஆட்டம் போடுகிருயா? இனி நீ என்னிடம் வாலாட்டத் தொடங்கி ஞல், உன் முகத்தில் காரித்துப்பி நாலுபேர் சிரிக்க வைத்து விடுவேன், தெரிந்துகொள்.' •. ." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/65&oldid=1338481" இலிருந்து மீள்விக்கப்பட்டது