பக்கம்:தரங்கிணி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

அதைத் திரும்பிப் பார்த்து உர்' என உறுமி, மேல் வரிசைப் பற்களைக் காட்டிப் பாய்ந்து விரட்டியது. அதன் பாய்ச் சலுக்குப் பயந்து, ஆண் நாய் பின்வாங்கி நின்றது.

"ஜோஸப் அண்ணேன் ஜோஸப் அண்ணேன். அப்பா கூப்பிடுகிருர்; வந்து கேள்' என்று கூப்பிட்டவாறு, காதரீன் வீட்டினுள் இருந்து தெருவாசலுக்கு வரலாள்ை. இதே சமயத்தில், தரங்கிணி, நடைக்குள் நுழைந்தாள்.

யாரு, தரங்கிணியா? ஏன் இங்கேயே நின்று விட்டாய்?... -

தோழியின் தளர்நடையைக் கண்டு வியப்போடு கேட்டாள்.

காதரீனக் கண்டு தரங்கிணி திகைத்துப் போனள். ஒருவேளை அவள் அண்ணனைக் கண்டித்துப் பேசியதைக் கேட்டுவிட்டிருப்பாளோ என அச்சங் கொண்டாள். உம், ஒன்றுமில்லை. நீ வீட்டில் இருக்கிருயா என்று உன் அண்ணனைக் கேட்டேன் என சமயோசிதமாகப் பதில் சொன்னாள்.

தரங்கிணியின் பேச்சில் தடுமாற்றம் காணப்படுவதை உணர்ந்த காதரீன், ஜோஸப் பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவன் வீதிப்பக்கம் எதையோ பார்ப்பதுபோல் திரும்பிக் கொண்டிருந்தான்.

"ஏன்? நான் இல்லையென்ருல் அப்படியே திரும்பிப் போய்விடலாம் என்று இருந்தாயோ?”

“ @ುಹಿ)” என்று தரங்கிணி இழுத்தாள். 'அம்மாவுக்குத் ெதரிந் தால் கோபித்துக் கொள்வார்

கள். நீ இவ்வளவு தூரம் வந்தும், தன்னைப் பார்க்காமல் போகிருயே என்று • . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/67&oldid=1338483" இலிருந்து மீள்விக்கப்பட்டது