பக்கம்:தரங்கிணி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

67

"அப்படி அம்மாவைப் பார்க்காமல் போவேன? வா, உள்ளே போகலாம்." -

இதற்குள் தன்னைச் சுதாரித்துக்கொண்டு தரங்கிணி சாதுரியமாகப் பேசினள். . .

ஜோஸப் அண்ணேன்! வருகிருயா? என்று கேட்டு விட்டு, காதரீன் தரங்கிணியுடன் உள்ளே போனள்.

இப்போதுதான் ஜோஸப் மூச்சுவிடலானன். சிறிதும் எதிர்பாராதவாறு காதரீன் எக்கச்சக்கமான வேளையில் வந்துவிட்டாளே! அவள் தோழியைத் தான் கேலிசெய்து கோபம் வருவித்துவிட்டதை அறிந்தால், தன்மீது எரிந் தல்லவா விழுந்திருப்பாள்? அப்பாவிடமோ அம்மா விடமோ பிராதுகூடப் போய்ச் செய்திருப்பாளே! நல்ல காலம்! தான் பயந்தபடி, தரங்கிணி, தான் அவளிடம் செய்த குறும்பைக் காதரீனிடம் சொல்லாமல் பெருந் தன்மையாகவன்ருே நடந்துகொண்டாள்? இந்த எண் ணம் எழுந்து ஜோஸப்பை வெட்கப்பட வைத்தது. தான் வரம்புமீறி அவளிடம் முறை தவருக நடந்துகொண்டும் அவள் தன்னைக்காட்டிக் கொடுக்காமல் போளுளே என்று நினைத்துப் பார்த்தபோது, அவன் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. "தரங்கிணி எவ்வளவு நல்ல பெண்! அவளிடம் போய் நான் அநாகரிகமாக நடந்துகொண்டேனே! என்று, அவன், தனக்குத்தானே பச்சாத்தாபப் பட்டுக் கொண்டான். -

இ . பகலவன் வானத்தின் நடுமண்டலத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தான். அவ்வுச்சி வேளையி

லும், பள்ளியாசிரியர் பரமசிவத்தின் வீட்டுக் கூடத்தில் வெளிச்சம் சரியாக இல்லை. அவ்வளவு தாழ்வான இடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/68&oldid=1338484" இலிருந்து மீள்விக்கப்பட்டது