பக்கம்:தரங்கிணி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68

திலும், அந்நேரத்தில் ஆள் நடமாட்டம் அதிகமாயிருந் தது. -

வயது முதிர்ச்சியால் மட்டுமல்லாமல், வறுமையின் கொடுமையாலும் வளைந்துவிட்ட கூன் முதுகைச் சுமந்து கொண்டு, பரமசிவத்தின் எலும்பு தோல் போர்த்த மெலிந்த உடம்பு,உள்ளுக்கும் வெளிக்குமாக ஒடி நடமாடிக் கொண்டிருந்தது. உள்ளிடில்லாமல் உடம்பு பூசுணைக்காய் போல் பருத்து ஊதியிருந்த காமாட்சியம்மாள், தான் உடுத்தியிருந்த நைந்த பழம் பட்டுப்புடவையின் கிழிசலை மறைக்க முயன்றுகொண்டே, சரிகை இழைத்த பட்டுப் புடவை சரசரக்க அமர்த்தலாக உட்கார்ந்திருந்த மங்கையரை, விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந் தாள். அவர்களுடைய மூத்த மகன் மணி, வந்திருப்பவர் களுக்குப் பலகாரம் காபி முதலியன பரிமாறுவதற்கு அன்னைக்கு உதவி புரிந்து கொண்டிருந்தான். தனக்குச் சிறிதும் தராமல் யாருக்கோ பட்சணங்களே அம்மா தந்து கொண்டிருக்கிருளே எனச் சிறுமி கல்யாணி சிணுங்கிக் கொண்டிருந்தாள். தேனுகா அவளைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். தரங்கிணி, பெண்களிடையே தலை குனிந்தவாறு அடக்கவொடுக்கமாக உட்கார்ந்து கொண் டிருந்தாள்.

ஆமாம்; தரங்கிணியைச் சிதம்பரத்திலிருந்து சிலர் பெண் பார்க்க வந்திருந்தனர். நான் வயதுக்கு வந்ததி லிருந்தே இப்படி எத்தனையோ பேர் வந்து பார்த்து விட்டுப் போயிருக்கின்றனர். அவர்களைப் போலத்தான் இவர்களும்' என்று அவள் மனத்தில் வருத்தமாக எண்ணிக்கொண்டிருந் தாள். இவ்விதமான வாட்டநிலையிலும் அவளுடைய மதிவதனம் சோபையுடன் விளங்கியது. மற்றவர்களைவிட, மாப்பிள்ளையாக வந்திருக்கும் இளைஞன் தரங்கிணியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/69&oldid=1338485" இலிருந்து மீள்விக்கப்பட்டது