பக்கம்:தரங்கிணி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பதிப்பின் முன்னுரை

எவ்வளவு நல்ல கொள்கையாக இருந்தாலும், இலட்சிய மாக இருந்தாலும், நல்ல செயல் முயற்சியாக இருந்தாலும் அதற்கு நல்வரவேற்பும் போதிய ஆதரவும் இருந்தால்தான் அது வெற்றிபெற முடியும்; அதன் பயனை மக்கள் துய்க்க முடியும். அதுபோலவே, எவ்வளவு அறிவாற்றல் மிகுந்தவரா யிருந்தாலும், செயல் திறனுடையவராயிருந்தாலும், அவருக்கு நல்ல சூழ்நிலையும் சுற்றுச்சார்பும் நல்லவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் இருந்தால்தான் அவர் உ ய ர் வ ைட ய முடியும். இதற்குச் சான்றுதேட வேறெங்கும் போகவேண்டி யதில்லை. தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சியும் அதன் வாயிலாக ஏற்பட்டுவரும் ந்ல்விளைவும், எழுத்தாளர் களுக்குக் கிடைத்துவரும் பேருதவியும், கண்கூடான உண்மை யாகும.

நம் சங்கத்தின்மூலம் முதன்முதலாக வெளியிடப்பட்ட நான்கு நூல்கள், விளம்பரப்படுத்தப்படாத நிலையிலேயே விரைவில் விற்பனையாகிவிட்டன. ஓராண்டுக்குள் விற்றுப் போன என்னுடைய நாவலான தரங்கிணி"க்கும், நண்பர் அகில னுனடய சகோதரரன்ருே? சிறுகதைத் தொகுதிக்கும், இரண் டாம் பதிப்பு வெளியிடப்படுவதற்கான செலவுக்கு ரூபாய் கடன் தந்துதவ, சங்கத்தலைவர் கி வா.ஜ. அவர்கள் அன்புள்ளத் துடன் பரிவுரை வழங்கினர். மற்ற ட்ைரக்டர்களும் ஒப்புதல் தந்தனர். ஆளுல் கடன்தொகை மார்ச்சுத் திங்களில்தான் கிடைத்தது. இவ்விதம் தாமதம் ஏற்படாதிருந்தால் தரங்கிணி" சென்ற ஆண்டே வெளியாகி, வாசகர்களின் கரங்களில் இருந் திருக்கும். தில்லிப் பல்கலைக் கழக மாணவர்களும் தொடர்ந்து பாடமாகப் படித்துப் பயன் பெற்றிருப்பர்.

எத்தனையோ அல்லல்களுக்கிடையே தரங்கிணி"யை மீண்டும் உங்கள்முன் கொணர்ந்திருக்கிறேன். உங்கள் பேரா தரவு என்றும்போல் இருக்கவேண்டும்.

'தரங்கிணி வெளிவருவதற்கு உதவிய சங்கத் தலைவருக் கும், டைரக்டர்களுக்கும், என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். -

சென்னை to . * * 15-9–67: நாரண-துரைககணணன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/7&oldid=575197" இலிருந்து மீள்விக்கப்பட்டது