பக்கம்:தரங்கிணி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

69

பேரழகை வைத்தக ண் வாங்காமல் பார்த்துக் கொண் டிருந்தான். -

"பெண் இன்னமும் வாசித்துக் கொண்டுதான் இருக் கிருளா?

மாப்பிள்ளை வீட்டாரில் வயதான கிழவரொருவர் கேட்டார்

"இல்லை; எஸ். எஸ். எல். ஸி., பாஸானதும் நிறுத்தி விட்டோம். ஆனால், சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிருள்." காவியேறிய பற்கள் தெரியப் பதில் சொன்னர் பரமசிவம். -

"அப்படியா! ஏன், மேல் படிப்புக்கு அனுப்பியிருக்க லாமே?”

அநாவசியமாகக் கேள்வி கேட்டார் ஒருவர். "எங்கேயாயினும் திருடிக்கொண்டு வந்துதான் படிக்க வைக்கணும்." -

ஆத்திரமாக வார்த்தைகள் வெளிவரத் துடித்தன. ஆனால், பரமசிவம், மிகச் சிரமத்துடன் தன் மன உணர்ச்சியை அடக்கிக் கொண்டார். - "சங்கீதம் சாதகஞ் செய்துவருகிருள் என்று முன்னமே தெரிந்திருந்தால், தியாகையர்வாள் கீர்த்தனை ஒன்றும், தீrதரின் சாஹித்யம் ஒன்றும் பாடச்சொல்லிக் கேட் டிருப்பேனே! நடுத்தர வயதுடைய மனிதரொருவர் அங்கலாய்ப்போடு பேசினர். 'ரேடியோ, சினிமாப் பாட்டுகளைக் கேட்ட பழக்கத்தில் இவள் பாடுகிருள் என் றல்லவா நினைத்தேன்...' - -

'குரலில் இருந்த சுகபாவத்தைக் கேட்டதுமே எனக்கு மட்டும்சந் தேகம்தான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/70&oldid=1338486" இலிருந்து மீள்விக்கப்பட்டது