பக்கம்:தரங்கிணி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70

"இப்பத்தான் என்ன? இரண்டு கீர்த்தனைகளைப் பாடச் சொல்லிக் கேட்டால் போகிறது. "நகுமோகு...' பாடம்மா!'

முப்பது வயதுள்ள மங்கையொருத்தி, சர்வ சாதாரண மாகச் சொன்னாள்.

தரங்கிணிக்கு வந்த கோபம் சொல்லி முடியாது. ஆனால், பாவம்! அவள் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ள முடியுமா? வந்ததுமே வழக்கத்தைவிட இவர்கள் பல பரீட்சைசளைச் செய்து பார்த்துவிட்டனர். கேள்வி களைக் கேட்டுத் தீர்த்துவிட்டனர். விடைபெற்றுப் போக எழுந்தவர்களுக்குச் சிற்றுண்டி தந்து உபசாரஞ் செய்வது நடந்து கொண்டிருக்கிறது. இவ்வளவுக்கும் பிறகு, மாப் பிள்ளை வீட்டு மனிதர்கள் சிலர், அநாவசியமான கேள்வி. கள் கேட்பதும், அதைப் பாடு இதைப் பாடு என்பதும் எரிச்சலை யுண்டாக்காமல் இருக்கமுடியுமா?

தான் முன்னமே எழுந்து போயிருக்க வேண்டும். காமாட்சியம்மாள் மாப்ப்பிள்ளை வீட்டாருக்குப் பலகாரம் பரிம்ாறத் தொடங்கியதும் எழுந்திருக்க முயன்ற தரங் கிணியை, ஒரு மாது கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்துவிட்டாள். அத்துடன், தான் அவசரப்பட்டு எழுந்து விட்டால், அப்பா கோபித்துக் கொண்டால் என்ன செய்வது? அம்மா வருகையில் அவளே மெல்லக் கேட்டுக் கொண்டு எழுந்துவிடலாம் என்று தரங்கிணி எண்ணிக் கொண்டிருந்தாள்.

மறுபடியும், மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் வம்பு அளக்க ஆரம்பித்து விட்டனரே! என்ன செய்வது?

"அந்தக் கீர்த்தனம் பாடமில்லை' என்று, தரங்கிணி வெறுப்பை வெளிப்படுத்தாமல் மெல்லச் சொன்னுள்.

அப்போதும் அவர்கள் விடவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/71&oldid=1338487" இலிருந்து மீள்விக்கப்பட்டது