பக்கம்:தரங்கிணி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

71

"அது பாடமில்லையானல், உனக்குத் தெரிந்த வேறெந்தக் கிருதியைாயினும் பாடு. சங்கீத மும்மூர்த்தி களின் சாஹித்யங்களில் ஒன்ருய் இருக்கணும். அவ்வளவு தான்...'

சங்கீதம்பற்றி ரொம்பத் தெரிந்தவர்போல் வாய்ச் சவடால் அடித்தார் ஒருவர், சபாக்களில் கச்சேரிகளை ஒசியில் கேட்ட பழக்கம் போலிருக்கிறது!

தரங்கிணி வேறு வழியின்றித் தன் தலைவிதியை நொந்துகொண்டு பாடத் தொடங்கிள்ை. அடுத்த கணம். அவளது மணிக்கண்டத்திலிருந்து, ராமநீ சமானமெவரு" என்ற கிருதி ஒலிக்கலாயிற்று. ஏதேனும் பாடத் தொடங் கில்ைதான் தரங்கிணி தன்னை மறந்து விடுவாளே! மிக அருமையாகப் பாடி முடித்தாள். ஆனல் அவள் அப் பாட்டைப் பாடியபோது தொனித்த இதய பாவம், "பூரீ ராமச்சந்திரா! ஏனடா என்னை இப்படிச் சோதனை செய்து கொண்டிருக்கிருய்? என் வாழ்க்கையில் விடிவு ஒன்றை ஏற்படுத்தி என் பெற்ருேருக்கு விடுதலையளிக்கக் கூடாதா? எ rறு வேண்டுகோள் விடுப்பதுபோல் உருக்கம் மிகுந்து இருந்தது. -

அவள் பாடி முடிப்பதற்கு முன்பே, பலே பேஷ்!" என்ற குரல் கேட்டது. குரல் வந்த இடத்தை எல்லாரும் நோக்க லாயினர். தரங்கிணியும் நிமிர்ந்து நோக்கிளுள்.மாப்பிள்ளை வாலிபன் உதட்டைக் கடித்தவாறு அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து சபாஷ் பட்டம் கிடைத்தது கண்டு, தரங்கிணி புன்சிரிப்புக் கொண் டாள். ஆனால், அதைப் பிறர் அறியாதவாறு செவ்விதழ் களின் குவிப்பில் மறைத்துக் கொண்டாள். *

"என்னடா செளந்தரராஜா இப்படிச் செய்து விட்டாயே?’ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/72&oldid=1338488" இலிருந்து மீள்விக்கப்பட்டது