பக்கம்:தரங்கிணி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72

ஒருவர் செல்லமாகக் கடிந்துகொண்டார்.

செளந்தரராஜனுக்கு ஒரே வெட்கமாய் விட்டது. "தாய் தந்தையர் முன்னேகூட உணர்ச்சியைக் கட்டுப்படுத் தாமல் போய்விட்டோமே? என, அவன் தன்னை நொந்து கொண்டான். தந்தை அவனை விரைப்பாகப் பார்த்து விட்டு, வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

பெண்பார்க்க வந்த பெண்மணிகள் ஒருவருக்கொரு வர் குசுகுசுவெனக் கூடிப் பேசிக் கொள்ளலாயினர். பெண் வீட்டு நிலைமையைத் தெரிந்து கொள்ளவோ என்னவோ. வயதான பாட்டியொருத்தி தட்டுத் தடுமாறி எழுந்து, பராக்குப் பார்ப்பதுபோல் வீடு முழுதையும் நோட்டம் இடலானள்.

மாப்பிள்ளே செளந்தரராஜன், தன் கண்களால் தரங் கிணியின் செளந்தரியத்தை ஒவ்வோர் அணுவாகப் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தான். மறுபடியும் இதைக் கவனித்துவிட்ட அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர், அவன் தொடையில் தட்டிக் கட்டுப்படுத்தினர்.

மாப்பிள்ளே வாலிபனுக்கு மட்டுமல்ல, பொதுவாக எல்லோருக்குமே தரங்கிணியைப் பிடித்துவிட்டது. அப்ப சரி, நாங்கள் புறப்படுகிருேம்" என்று சொல்லிப் பிள்ளை யின் தகப்பனர் எழுந்த தோரணை, இதை ஒருவிதமாகத் தெரிவித்தது. மற்றவர்களும் அவருடன் சேர்ந்து எழுந் திருந்தனர்.

இதுதான் சமயமென்று, தரங்கிணி விருட்டென எழுந்து எதிர் அறையின் உள்ளே போளுள்.

என்ன கொடுப்பாரோ?' என லட்சாதிபதிமுன் ஏங்கி நிற்கும் பிச்சைக்காரனைப்போல, பரமசிவம், மாப்பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/73&oldid=1338489" இலிருந்து மீள்விக்கப்பட்டது