பக்கம்:தரங்கிணி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

73

யின் பெற்ருேருடைய முகக் குறிப்பைப் பார்த்தவாறு நின்ருர்.

மாப்பிள்ளையின் தந்தை சொன்ஞர்: "நாங்கள் ஊருக்குப் போனதும் உங்களுக்குக் கடிதம் எழுதுகிருேம். அதிலுள்ளபடி நீங்கள் நடந்துகொள்வதாயிருந்தால், நீங் களே முகூர்த்தத்திற்கு நாள்பார்த்து நிச்சயித்து எங்களுக் குத் தெரிவித்துவிடலாம். நாங்களும் பார்க்கிருேம்.

அதற்கென்ன! அப்படியே... "பையன் என்ன படித்திருக்கிருன், தெரியுமோ, இல்லையோ! பி. க்ாம். பாஸ் செய்திருக்கிருளுக்கும். அடுத்த மாதம் ஸ்டேட் பாங்கில் உத்தியோகம் ஆய்விடும். அப்ளிகேஷன் போட்டுவிட்டுப் பார்க்கவேண்டியவர்களை யும் பார்த்துச் சரிப்படுத்தி வைத்திருக்கிருேம். இதையெல் லாம் நீங்கள் கவனித்து, எங்கள் அந்தஸ்துக்குத் தகுந்த படி...' به

மாப்பிள்ளையின் தந்தை, சொல்ல வந்ததை முடிக்கா மலே இடையில் நிறுத்திவிட்டு, பரமசிவத்தின் முகத்தைக் கவனித்தார். - -

"அவருக்குத் தெரியாதா, என்ன? நன்ருய்ச் செய்தால் அவர்களுக்குத்தானே கெளரவம். வேறு யாருக்குச் செய்யப் போகிருர்? அவர் பெற்ற பெண்ணுக்குத் தானே?

பிள்ளையின் தாயார் சாதுரியமாகப் பேசிளுள். "என் நிலைமையையும் நீங்கள் கவனிக்கணும். நான் சாதாரணப் பள்ளிக்கூட உபாத்தியாயர், பிள்ளைகுட்டிக் காரன். என்ைெருவனுடைய சம்பாத்தியத்தைத் தவிர, வேறு வருமானமோ சொத்தோ கிடையாது. மூத்த பையன்கூட இன்னும் படித்துக் கொண்டுதான் இருக் கிருன்..." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/74&oldid=1338490" இலிருந்து மீள்விக்கப்பட்டது