பக்கம்:தரங்கிணி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74

பரமசிவம், அழமாட்டாத குறையாகத் தம் நிலையை எடுத்துச் சொல்லலானர்.

'அதற்கு...?”

பிள்ளையின் தகப்பனர், அதட்டிக் கேட்டார்.

"என்னல் முடிந்த அளவு வஞ்சகமில்லாமல் ஏதோ செய்வேன். அதை நீங்கள் பெரிய மனது பண்ணி..."

பிள்ளையின் அன்னை இடைமறித்துப் பேசிள்ை. கணவரைப் பார்த்தவாறு: "அந்தச் சாஸ்திரி தரகர் பிரமாதமாக அளந்தாரே!'

பிள்ளையின் தகப்பனர் மனைவியைக் கையமர்த்தி,

"சரி. சரி. எங்களுக்கு நேரமாகிறது. நாங்கள் ஊருக்குப் போய் எழுதுகிருேம்” என்று கூறியவாறு, வெளியே நடக் கலானர்.

பரமசிவம் அவர் பின்னலே குழைந்துகொண்டு போனர். காமாட்சியம்மாள் கையைப் பிசைந்து கொண்டு நின்ருள்.

பிள்ளையின் தகப்பனர், பரமசிவத்தைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் காரில் ஏறலானர். அவர் மனைவியும் மற்றவர் களும் மரியாதைக்குக்கூடப் போய் வருகிருேம் என்று ஒரு வார்த்தையும் அவரிடம் சொல்லாமல் போயினர். மாப்பிள்ளை வாலிபன் மட்டும், தரங்கிணி இருக்கும் அறையை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டே, தயங்கித் தயங்கி நடக்கலானன். இவ்விதம் பின்தங்கி நின்ற அவனை, "வாடா, செளந்தரராஜா! அப்பா கோபித்துக் கொள்ளப் போகிருர் என்று எச்சரித்தவாறு, கையைப் பிடித்துப் பரபரவென்று இழுத்துச் சென்ருர் ஒருவர்.

பிள்ளை வீட்டார், இப்படி எதுவும் சொல்லாமல், பந்தயக் குதிரைபோல் ஒருவருக்கு முந்தி ஒருவராகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/75&oldid=1338491" இலிருந்து மீள்விக்கப்பட்டது