பக்கம்:தரங்கிணி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

75

போனலும், "போய் வருகிறீர்களா?" என்று பரமசிவம் தானகவே சொல்லி, வழியனுப்பி வைத்தார்.

செளந்தரராஜன் அவரைப் பரிதாபமாகப் பார்த் தான். தரங்கிணி இருந்த அறையின் ஜன்னலேயும் திரும்பிப் பார்த்தான். ஜன்னலருகே நின்று, வந்தவர்கள் போவதைக் கவனித்துக் கொண்டிருந்த தரங்கிணி, மாப் பிள்ளை திரும்பி ஜன்னலை நோக்குவதைப் பார்த்துவிட்டுச் சடக்கென தன் தலையை உள்ளுக்கு இழுத்துக் கொண் டாள்.

பிள்ளை வீட்டார் ஏறிச்சென்ற கார்கள் தெருக் கோடிக்குப் போகும்வரை கூடப் பரமசிவம் பார்த்துக் கொண்டே நின்றிருந்தார்.

இதைப் பார்த்துவிட்டு எதிர்விட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த சிலர், 'பாவம் மனுஷன் பெண்களைப் பெற்றுவிட்டு, இப்படிக் கிடந்து தவிக்கிருர். பெண் பார்க்க வருகிறவர்களைத் திருப்திப்படுத்த அவர் என்ன பாடுபடுகிருர்? பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது” என்று பேசிக்கொண்டனர்.

இது பரமசிவத்தின் செவியில் விழுந்ததோ இல்லை யோ, முன் அறையில் இருந்த தரங்கிணிக்கு நன்முகக் கேட்டது.

ஏற்கனவே, தன்தந்தை பிள்ளைவீட்டாரிடம் மிகவும் வளைந்து கொடுத்துப் பேசுவதைக் கண்டு, அவள் மனம் மிகவும் வேதனைப்பட்டது. அவள், தாயை அழைத்து அவரைக் கூப்பிடச் சொல்லவும் நினைத்தாள். ஆளுல், அவளுக்குத் துணிவு ஏற்படவில்லை. என்னல்தானே அப்பா இப்படியெல்லாம் கஷ்டப்படுகிருர். யார் யாருக்கோ கூழைக் கும்பிடு போடுகிரு.ர். நான் எதற்காகப் பெண்ணுய்ப் பிறந்தேன்? ஆண் பிள்ளையாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/76&oldid=1338492" இலிருந்து மீள்விக்கப்பட்டது