பக்கம்:தரங்கிணி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76

பிறந்திருக்கக் கூடாதா? அப்பாவுக்கு உதவியாக இருந் திருக்கலாமே?... என்று எண்ணி வருந்திக் கொண்டிருந் தாள். இந்நிலையில், எதிர்வீட்டார் தந்தைக்கு இரக்கப் பட்டுப் பேசியதைக் கேட்டதும், அவளால் துக்கம் தாங்க முடியவில்லை. அவள் கதறியழுது கொண்டே தன் படுக்கை யில் போய் விழுந்தாள். அவளுடைய நொந்த உள்ளம் என்னென்னவோ நீள நினைக்கலாயிற்று.

அன்று சனிக்கிழமை. காமாட்சியம்மாள் வீட்டில் நாகலந்து பெண்மணிகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந் தனர். சூரியன் வடதிசை நோக்கிப் பிரயாணஞ் செய்யத் தொடங்கிவிட்டதால், பிற்பகல் மூன்றுமணிக்கு மேலாகி யும் வெய்யிலின் வெப்பந் தணியவில்லை. தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த லக்ஷ்மி பாட்டிக்கு மட்டும், வெய்யில்படுவது அவருடைய சதைப்பற்றற்றுத் திரைத்திருந்த உடம்புக்கு இதமாயிருந்தது. அந்தப் பாட்டி தவிர, மற்றவர்களெல் லாம் அப்பளம் இட்டுக் கொண்டிருந்தனர்; சிலர் பூரி மணைகளில் அப்பளம் உருட்டிக் கொண்டிருந்தனர். சிலர் அப்பளப்பூ செய்து கொண்டிருந்தனர். இவர்கள், பெரும் பாலும் முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களாகக் காணப்பட்டனர். லக்ஷ்மி பாட்டி ஏதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்க, அவர்களில் சிலர் அதற்குப் பதிலளித்துப் பேசிக் கொண்டிருந்தனர். புறக்கடைக்குப் போகும் நடைபாதை யோரத்தில் அமர்ந்து, கல்யாணியும் தேனுகாவும் தாயக்கட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். மணி, கூடத்தில் மேஜைப் பக்கத்தில் உட்கார்ந்து, திங்கட் கிழமையன்று காலே, கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்குப் போவதற்காகத் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/77&oldid=1338493" இலிருந்து மீள்விக்கப்பட்டது