பக்கம்:தரங்கிணி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

**

போட்டுக்கொண்டு செல்லும் என். சி. சி. படையுடுப்பை யும் குல்லாயையும் எடுத்து உதறிச் சுருக்கம் இல்லாமல் இருக்கத் தீற்றிக் கொண்டிருந்தான். - - கூடத்து அறையிலிருந்து, காமாட்சியம்மாள் இடக் கையில் சில துணிகளையும் வலக்கரத்தில் ஊசி நூலையும் எடுத்துக்கொண்டு வந்து, கூடத்துக்கும் தாழ்வாரத்துக்கும் இடையில் மற்றவர்களுக்கு முன்னல் உட்காரலாள்ை.

'அடி, தேனு! எங்கே இருக்கிறீங்க? அக்கா வெளியே போய்விட்டாளா? சாப்பிட்டானதும் எங்கோ போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தாளே!

அவள், தன் கணவனுடைய கோட்டு ஒன்றைப் பிரித்துப் பார்த்து, கிழிந்த இடங்களைத் தைக்கத் தொடங் கியபடி கேட்டாள்.

ஆட்டச் சுவாரஸ்யத்தில், தேனுகா, தாய் கேட்ட கேள்வியைச் செவியில் ஏற்கவில்லை. அவள் கல்யாணியின் காய்களை வெட்டி வீழ்த்துவதிலேயே கண்ணுங் கருத்து மாய் இருந்தாள். கல்யாணிதான் பதில் சொன்னுள்:

"போய்விட்டாப்போல்தான் இருக்குதம்மா!' இதுகேட்டு மணி நிமிர்ந்து பார்த்தான். அவன் தானகவே சிரித்துக் கொண்டான்.

கல்யாணி சொன்னபடி, தரங்கிணி வெளியே போக வில்லை. தன் அறையில்தான் இருந்தாள். அவள் கரத்தில் ஒரு புத்தகம் இருந்தது. அதனல் அவள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். புகைபடிந்த அழகிய ஒவியத் தைப்போல், சோகம் கப்பியிருந்த அவள் முகம், சோபை யற்றுக் காணப்பட்டது. - -

அப்பளப்பூ இட்டுக்கொண்டிருந்த அம்புஜம் கேட் டாள்: 'ஏன், மாமி! தரங்கம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிருள்? சனிக்கிழமைகளில்கூடச் சாப்பிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/78&oldid=1338494" இலிருந்து மீள்விக்கப்பட்டது