பக்கம்:தரங்கிணி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

78

தும் சாப்பிடாததுமாக அப்படி என்ன அவசர வேலை?” அவள் கேள்வியில் குறும்பு தொனித்ததுல்

அதே சமயத்தில் ராஜம்மா, தேனு என்று கூப்பிட் டீர்க்ளே? அது என்ன செல்லப் பெயர்? அர்த்தம் புரியலையே, மாமி’ என்று வினவினள்.

காமாட்சியம்மாள் ஏதோ சொல்ல வாய் திறக்கு முன்னர், லக்ஷ்மி பாட்டி குறுக்கிட்டு, "உனக்கு எங்கேயடி இதெல்லாம் புரியப் போகிறது? சுத்தப் பட்டிக்காடு. சங்கீதம் என்ருல், வீசை என்ன விலை என்று கேட்கக் . ri.LH.ll.J. . . . . . 影飘ث

“என்ன பாட்டி, ராஜத்தை ஒரேயடியா மட்டந்தட்டு கிறீர்கள்?"

வைதேகியம்மாள் சிரித்துக்கொண்டே கேட்டாள். "பின்னே என்ன? தேனுகா என்பது அருமையான ராகத்தின் பெயர். இதை இவர்க்ள் தங்கள் செல்வக் குமரிக்கு வைத்திருக்கிருர்கள். ராஜம் எவ்வளவு காலமாகக் காமாட்சியகத்துக்கு வருகிருள், போகிருள். இதுகூடத் தெரியாமல்....

பாட்டி நீட்டி இழுத்துப் பேசிக்கொண்டே போனள். தேனுகா மட்டுமா ராகத்தின் பெயர்? தரங்கிணி, கல்யாணி எல்லாங்கூட ராகங்களின் பெயர்தான். ஆனல், கல்யாணி என்ற ராகப்பெயரைப் பொதுவாகப் பெரும் பாலோர் பெண்களுக்குப் பெயராக வைத்து வழங்குகிறர் கள். தரங்கிணி, தேனுகா போன்ற ராகங்களின் பெயர் களை மட்டும் பெண்களுக்கு வைத்து அழைப்பது, காமு மாமி அகத்தில் தவிர அநேகமாக நாம் வேறெங்கும் கேட் டிருக்கமாட்டோம். என்ன சொல்கிறீர்கள். பாட்டி? நான் சொல்வது தரிசானே? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/79&oldid=1338495" இலிருந்து மீள்விக்கப்பட்டது