பக்கம்:தரங்கிணி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்றம் பதிப்பின் முன்னுரை

பழைய இலக்கிய மரபுப்படி, நல்லாசிரியர்கள் சிலர் வாயி லாகத் தமிழ் இலக்கியங்களைப் பயின்றுவந்த நான், புதுமை, இலக்கியப் படைப்புப் பணியில் ஈடுபட்டது, நான் மேற்: கொண்ட பத்திரிகைத் தொழிலால்தான்.

மேட்ைடுப் பல்கலைக்கழகங்கள், நீண்ட காலமாகவே புதுமை இலக்கியங்களை, அதாவது சிறுகதை நாவல்களை மாணவர்களுக்குப் பாடங்களாக வைத்துப் படிக்கச் செய்து வருகின்றன. ஆனால், நம் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் பழைய இலக்கியங்களையே திருப்பித்திருப்பிப் பாடங்களாக வைத்துவந்தனவே யொழிய, புத்திலக்கியங்களுக்கு இடந் தராமலே இருந்து வந்தன. -

காலத்தின் கட்டாயம் நம்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு மனமாற்றத்தை யுண்டுபண்ணியிருக்கிறது. சில ஆண்டுகளாக, நம் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் தற்கால இலக்கி யங்கள் இடம் பெற்று, மாணவர்களுக்குப் பாடங்களாகப் போதிக்கப்பட்டு வருகின்றன. -

பல கலைகளுக்கும் தாயகமாக உள்ள பல்கலைக் கழகங்கள். படைப்பு இலக்கியக் கலைக்கும் இடந்தந்து வளர்க்க முற் பட்டிருப்பது வரவேற்கத் தக்கதாகும். சென்னை, மதுரைப் பல்கலைக் கழகங்கள் அவ்வகையில் புரிந்துவரும் தொண்டு பாராட்டுதற்குரியது. -

இந்நிலையில்தான் பல்கலைக்கழகப் பேராசிரிய நண்பர்கள் சிலர், என் நாவல்கள், நாடகங்களைப் பல்கலைக்கழகப் பாடத் தேர்வுக் குழுவினர்க்கு அனுப்பி வைக்குமாறு, என்னைத் தூண்டிக் கொண்டிருந்தனர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/8&oldid=575198" இலிருந்து மீள்விக்கப்பட்டது