பக்கம்:தரங்கிணி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

7g

ஏறக்குறைய இருபது வயதுள்ள இளமங்கை யொருத்தி, கையில் ஒரு கம்பளி நூல் உருண்டையும் நீளமான ஒரு பிளாஸ்டிக் ஊசியுமாக, உள்ளே வந்து கொண்டிருந்தாள். அவள்தான் இவ்விதம் அபிப்பிராயஞ் சொல்லிக்கொண்டு வந்தாள். -

"வா செளந்தரம், வா! எங்கே? ரொம்ப நாளாகக் காளுேமே?” *

காமாட்சியம்மாள் வரவேற்ருள். - பாட்டி பொக்கை வாயைத் திறந்தாள்: செளந்தரி சொன்னது உண்மையான பேச்சு. தரங்கினி, தேனுகா போன்ற ராகங்களின் பெயர்களைப் பெண்களுக்கு வைக்கப் பலருக்குத் தோன்றது. காமாட்சியாத்துக்காரர் சங்கீத ஞானமுடையவராய் இருக்கவிட்டு...' -

'வெறும் சங்கீத ஞானம் இருந்தால்மட்டும் இவ் விதம் பெயர் வைக்கத் தோன்றியிருக்காது. கர்நாடக சங்கீதத்தின் மீதுள்ள ஈடுபாடும் பரம ரசிகத் தன்மையும் தான், வாத்தியார் மாமாவுக்கு இதுபோல ராகங்களின் பெயரை வைக்கச் செய்திருக்கிறது.” -

துரண் ஒரமாகப் போய் உட்கார்ந்தவாறே பாட்டி யைத் தொடர்ந்து பேசிய செளந்தரம். 'மணிக்கு மட்டும் ஏன் மாமி, மாமா ராகத்தின் பெயரை வைக்கவில்லை' என்று கேட்டாள். அவளுடைய மலர்க் கரங்கள் ஸ்வெட்டரைப் பின்னிக் கொண்டிருந்தன. -

காமாட்சியம்மாள் புன்னகை புரிந்துகொண்டே, "நல்ல கேள்வி கேட்டாய்?’ என்று சொல்லி நிறுத்தி, பின், "அவருக்குச் சுப்பிரமணிய சுவாமிமீது அபார பக்தி. சதா முருகன் உபாசனைதான். பெரியவாள் வள்ளி மலை சுவாமிகளின் பஜனை கோஷ்டியுடன் சேர்ந்து கொண்டு, வருஷா வருஷம் திருத்தணிக்குப் போய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/80&oldid=1338496" இலிருந்து மீள்விக்கப்பட்டது