பக்கம்:தரங்கிணி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

82

லக்ஷ்மி பாட்டி, யோசனையோடு, ஏன் காமாட்சி! நம்ம தங்கம் செளந்தரத்தைவிடப் பெரியவளா? சின்ன வளா?...' என்று கேட்டாள்.

உடனே, காமாட்சியம்மாளின் முகத்தைத் துயர மேகம் சூழ்ந்தது. அவள், இக் கேள்வியைச் செவியில் வாங்காதவள்போல், கிழிசல்களுக்கு ஒட்டுப் போட்டுத் தைத்துக் கொண்டிருந்தாள்.

செளந்தரம், "நான் தரங்கத்தைவிட ஒரு வயது சிறியவள், பாட்டி...!"

"அப்படியா?” மற்றவர்கள் காமாட்சியம்மாளை நோக்கலாயினர். தன்னறையிலிருந்த தரங்கிணியின் செவிகளில், இவர் கள் பேசுவது பெரும்பாலும் கேட்டுக்கொண்டிருந்தது. செளந்தரம் தன்னைப்பற்றிக் கேட்கிருள் என்றதுமே, அவள் ஆவல் உணர்ச்சி கொள்ளாள்ை.

பாட்டி மெளனத்தைக் கலைத்தாள், "ஏன் காமாட்சி? கேட்கனும், கேட்கணும் என்று. ஆவணி மாசம் யாரோ வந்து நம்ம தங்கத்தைப் பார்த்துவிட்டுப் போனர்களே? அது என்ன ஆயிற்று? ஏதாவது தகவல் சொல்லியிருக் கிரு.ர்களா?”

காமாட்சியம்மாள் கண்களிலிருந்து நீர் துளிர்த்தது. மற்றவர்கள் கவனிக்கும் முன்பு, அவசர அவசரமாகக் கண்ணிரைத் தன் முந்தானையால் துடைத்துக்கொண்டு, "மிகவும் சிரமப்பட்டுப் பெண்ணைப் பார்க்க வந்தவர்கள், தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லாமல் இருப்பார்களா பாட்டி? நீண்ட காலமாக நடந்துவரும் கதைதான். வந்து பார்த்தவர்கள் எல்லோருக்குமே 5ಠ್ಯಪುಟ த்தை ரிெம்பப் பிடித்துவிட்டது. ஆனால், தங்கள் அந்தஸ்துக்கும், பிள்ளை பின் படிப்பு உத்தியோகத்துக்கும் தகுந்தபடி, எங்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/83&oldid=1338499" இலிருந்து மீள்விக்கப்பட்டது