பக்கம்:தரங்கிணி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

83

எதுவுஞ் செய்ய முடியாது என்று அவர்களாகவே தீர் மானித்துக்கொண்டு, மேலே பேச்சு வார்த்தை ஒன்றும் வைத்துக் கொள்ளாமல், நின்று விட்டார்கள். மாப்பிள்ளைப் பையன் மட்டும், அவர்களுக்குப் பண வசதி எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவர்கள் வசதிக்குத் தகுந்தபடி செய்வது செய்யட்டும். நான் அந்தப் பெண் ணேயேதான் திருமணஞ் செய்து கொள்ளுவேன்' என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிருளும். இதல்ை, பிள்ளைக்கும் பெற்ருேருக்கும் இ ைடயே பெரிய போராட்டமே நடந்து கொண்டிருக்கிறதாம்...”

வைதேகி, "நான்கூட இவ்விஷயத்தைக் கேள்விப் பட்டேன். அகத்துக்காரருக்கு அவருடைய பாங்கில் வேலை பார்க்கும் யாரோ ஒருவர் சொன்னராம். இவர்களுடைய கிளை பாங்கில்தான் அந்தப் பிள்ளையும் ஹெட் அக்கவுண் டண்டாயிருக்கிருனம்' என்று குறுக்கிட்டுச் சொன்னள். "பிள்ளையாண்டான் புத்திசாலி போலிருக்கு. தங் கத்தைப் பார்த்தவுடனே புரிந்து கொண்டான், இவள் தங்களுடைய குடும்பத்தை விளங்க வைக்கக்கூடிய கிருக லக்ஷ்மியாயிருப்பாள் என்று. பணத்தையே பெரிதாக மதிக்கும் தாய் தகப்பருைக்கு இது எங்கே தெரியப் போகிறது?" என்று தொடங்கிய லக்ஷ்மி பாட்டி, காமாட்சி! என்னை மன்னிச்சுடடி அம்மா! தங்கத்துக்கு இளசாயிருக்கிறதுக்கெல்லாம் கல்யாணம், கார்த்தி என்று கடுக நடந்து விடுகின்றனவே! இவளுக்குக் கல்யாணம் கூடிவிடக்கூடாதா என்ற ஆதங்கத்தால் தான் உன்னைக் கேட்டேன். தங்கத்தைக் கடைசியாக வந்து பார்த்தவர்கள் என்ன முடிவு சொன்னர்கள் என்று தெரிந்துகொள்ளக் கேட்டேன். உன் மனம் இவ்வளவு வேதனைப்படும் என்று தெரிந்திருந்தால், நான் இதைக்

கேட் இருக்கமாட்டேன். முன்ைேரு சமயம் நீ பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/84&oldid=1338500" இலிருந்து மீள்விக்கப்பட்டது