பக்கம்:தரங்கிணி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

84

களப்பற்றிக் கவலை தெரிவித்தபோது, நான் ஏதோ எண்ணிக்கொண்டு, எனக்குத்தான் எல்லாந் தெரியும் என்று ஏதேதோ அளந்தேன். நீ அப்போதே பயந்ததற்குப் போதிய காரணம் இருக்கிறதென்று எனக்கு இப்போது தான் மூளையில் தட்டுப்படுகிறது...... ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள், தங்கள் குடும்பத்துக்குப் பொருத்தமான மருமகளைப் பார்த்துக்கொண்டு போக வருகிரு.ர்களா? அல்லது தங்கள் பிள்ளைகளைக் காட்டி, அவர்களுடைய படிப்பு உத்தியோகங்களைக் காட்டி, பணம் பறிக்க வரு கிருர்களா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன இருந் தாலும், ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு, இவ்வளவு பணப் பேராசை உதவாது'......

காமாட்சியம்மாள், "அவர்களைக் குற்றஞ் சொல் வதில் பயனில்லை, பாட்டி! பெண்களை அடுக்கடுக்காகப் பெற்றுவிட்டுப் பரிதவிக்கும், என்னைப்போன்ற பாவ ஜன்மங்களைச் சொல்லவேண்டும். முன் பிறப்பில் செய் துள்ள கர்மங்கள் சும்மா விட்டுவிடுமா?...'

லசஷ்மி பாட்டி, 'காமாட்சி, மனசை அடியோடு தளர விட்டுவிடாதே! தங்கம் கலியாணத்துக்கு இன்னம் வேளையும் நாழிகையும் வரவில்லை. வியாழ அனுகூலம் ஏற்பட்டதும், நொடியில் எல்லாம் குதிர்ந்து விடும். தங்கத் துக்கென்று ஒருத்தன் எங்கேயோ பிறந்துதான் இருக் கிருன்.

"தரங்கத்தைப் பார்க்க வருபவர்க்ளுக்குக் குறை வில்லை. ஆனால், ஒரு முடிவுதான் ஏற்படாமல் இழுத்துப் பறித்துக்கொண்டு நாள் போகிறது. இப்போதுகூட அகத் துக்காரர்யரோ சொன்னர்கள் என்று ஒரு பிள்ளையைப் பற்றி விசாரிக்கப் போய் இருக்கிரு.ர். அப்படியா?" .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/85&oldid=1338501" இலிருந்து மீள்விக்கப்பட்டது