பக்கம்:தரங்கிணி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

86.

சாய்த்துக் கொண்டு, உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருகிருள். நான் என்னமோ சொல்கிறேனென்று நினைக் காதீர்கள்...... 鼻露

இவள் பொரிந்து தள்ளிய பேச்சைக்கேட்டுக் காமாட்சி மட்டுமல்ல, மற்ற எல்லோருமே திகைத்துப் போய் விட்டார்கள்.

வைதேகி மட்டும், அம்புஜத்தைப் பின்தொடர்ந்து பேசலாள்ை. அம்புஜம் சொல்லிய அவ்வளவையும் நீங்கள் அப்படியே எடுத்துக் கொள்ளாவிட்டாலும், ஒரு விஷயத்தை மட்டும் காமு மாமி கட்டாயம் கேட்கத் தான்வேண்டும். தரங்கத்தை வெளியே எங்கும் அனுப்பா மல் இருப்பதுதான் நல்லது. படிப்பு ஒருவிதமாக முடிந்தது. சங்கீத சிrையும் முடிந்துவிட்டது. இனியும் அவளுக்கு வெளியே என்ன வேலை என்று கேட்கிறேன். உங்கள் குடும்ப விஷயத்தில் நான் தலையிடுவதாக எண்ணக் கூடாது. வீண் அபவாதத்துக்கு நீங்களே இடங்கொடுத்து விடக் கூடாதென்றுதான் இவ்வளவும் சொல்லு கிறேன்..." . . . -

காமாட்சியம்மாள் அயர்ந்து போய்விட்டாள். 'கூடப் படித்த பெண்கள் இவளை வந்து பார்க்கிருர்கள். இவளும் மரியாதைக்கு அவர்களைப் போய்ப்பார்க்கிருள். சிநேகிதை களாக இருப்பவர்கள் பார்ப்பதும் பேசுவதும் தவரு, வைதேகி?" -

'சிநேகிதம் என்று சொல்லிக் கண்டவர்கள் வீட்டுக்குப் போவதா, மாமி? இவ்வளவு தூரம் பேச்சு வந்த பிறகு, என் மனத்தில் உள்ளதை வெளிப்படையாக சொல்லுகிறேன். தரங்கம் அந்தக் கிறிஸ்தவப் பெண் வீட்டுக்கு அடிக்கடி போய்வருவது எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. என்னதான் பள்ளிச் சிநேகம் இருந்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/87&oldid=1338503" இலிருந்து மீள்விக்கப்பட்டது