பக்கம்:தரங்கிணி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

87.

அம்.......... ." வைதேகி மூச்சுப்பிடித்துக் கொண்டு பேசினள். "இரண்டு மூன்று தடவை பார்த்தேன். அந்தப் பெண்ணின் அண்ணன் போலிருக்கு, அவன், தரங்கம் பின்னலேயே சைக்கிளை விட்டுக்கொண்டு வந்ததை. எனக்கு இரத்தம் கொதித்தது. நம்ம குலம் என்ன? கோத் திரம் என்ன? பாரம்பரியப் பெருமை என்ன?...'

"வைதேகி சொல்வது நியாயம்தான். நான்கூட ஒரு முறை பார்த்தேன், தரங்கத்தின் பின்னலே அந்தப் பயல் வால் பிடித்துக்கொண்டு போவதை. மனந்தாங்காமல் நான் ஒருநாள் தரங்கத்தைக் கூப்பிட்டுக் கொண்டேன். தரங்க்த்தை வேண்டுமானல் கேட்டுப் பாருங்கள், மாமி: விசாலம் சொன்னாள்

அறையிலிருந்த தரங்கிணிக்கு இப் பேச்சுக்க்ளெல்லாம் நாராசங் காய்ச்சிக் காதில் ஊற்றுவதுபோல், கடலாயின. 'போதும்; உங்கள் பிதற்றுதலை நிறுத்துங்கள் என்று கூவிக்கொண்டே, வெளியே ஒடிவரவேண்டும் போலிருந் தது.

காமாட்சியம்மாள், இவர்கள் பேச்சுக்கு என்ன சமாதானஞ் சொல்லுவது என்று தெரியாமல், சங்கடப் பட்டுக் கொண்டிருந்தாள். இச் சமயம் தெரு நடையில் செருப்புச் சப்தங் கேட்கலாயிற்று. அடுத்த கணம். காமாட்சியம்மாளை அவள் உள்ள சங்கடநிலையிலிருந்து காப்பாற்ற வருவதுபோல, பரமசிவம் உள்ளே வரலானர். இவர் வருகையைக் கண்டதும், லக்ஷ்மி பாட்டி உட்பட எல்லாப் பெண்களும், குபீரென எழுந்துவிட்டனர்.

"போய் வருகிறேன், காமாட்சி" என்று கூறிக் கொண்டே, வெளியே நடந்தாள் லக்ஷ்மி பாட்டி. மற்றப் பெண்களும் காமாட்சியும்மாளுக்குத் தாங்களும் போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/88&oldid=1338504" இலிருந்து மீள்விக்கப்பட்டது