பக்கம்:தரங்கிணி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

88

வருவதாகச் சைகை காட்டிவிட்டுப் பாட்டியைப் பின் தொடர்ந்தனர்.

உணர்ச்சி உந்த, தரங்கிணி துள்ளியெழுந்து கதவு வரை வந்துவிட்டாள். தந்தை வந்திருக்கிருர் என அறிந்த தும், அவள் சந்தர்ப்பவேகத்தை மிகச்சிரமப்பட்டு அடக் கிக் கொண்டு, தன் இருப்பிடத்துக்குத் திரும்பினள்.

பரமசிவம் மேல் உத்தரீயத்தை எடுத்துக் கொக்கியில் மாட்டிவிட்டுக் கால்கூடக் கழுவாமல் சாய்வு நாற்காலியில் "அப்பாடா!' என்றவாறு சாய்ந்துவிட்டார். போன காரியம் என்ன ஆயிற்று” என்று ஆவலோடு கேட்க வாய் எடுத்த காமாட்சியம்மாள். இவருடைய அலுப்பைக் கண்டு காபி தயாரித்து எடுத்துவர, வேகமாக உள்ளே போளுள்.

கனகராயர் இல்லம் சீனர்கள் வேலைப்பாடுடன் செய்துள்ள பல வண்ணக் காகிதப் பூமாலைகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவை களிடையே பெரியபெரிய பன்னிறப் பலூன்கள் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தன. சுவரில் மாட்டப்பட்டுள்ள ஏசுபெருமானின் படங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. காலையிலிருந்து ஆண்களும் புெண்களும் குழந்தைகளுடன் அணியணியாக வந்து குழுமிக் கொண்டிருந்தனர். இவர்கள் அன்றி, மாணவிகள் போல் காணப்பட்ட இளநங்கையர் கூட்டம் அதிகமாயிருந் தது. வருவோரை தங்கராஜூம், ஜோஸபும், வெளி வாயிலில் நின்று, இன்முகத்துடன் வரவேற்றுக் கொண்டி ருந்தனர். உள்ளே, சந்தோஷ்நாதம் பிள்ளையும் செல்லம் :ம்ாளும் வந்தவர்களே உபசரித்துக் கொண்டிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/89&oldid=1338505" இலிருந்து மீள்விக்கப்பட்டது