பக்கம்:தரங்கிணி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

ஆனால், நான் தயக்கத்தோடுதான், பேராசிரிய நண்பர் களின் யோசனையை ஏற்று, என் புத்தகங்களைப் பல்கலைக்கழகப் பாடத் தேர்வுக்குழுவுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக அனுப்பிக் கொண்டிருந்தேன். -

இவ்வாண்டுதான் அம்முயற்சி வெற்றி கண்டது. சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுக் குழுவினர் 1978-79-ம் ஆண்டிற்கான பி. ஏ., பி. எஸ்.ஸி. பட்டப்படிப்புக்கு, என் நாவலான தரங்கிணி"யைத் துணைப்பாடமாகத் தேர்ந் தெடுத்திருக்கின்றனர். அவ்வறிஞர் பெருமக்களுக்கு நான் என்றென்றும் நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நல்ல வகையில், நல்ல புத்தகங்களை வெளியிடும் முயற்சி யில், எங்கள் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் ஈடுபட் 12ஆண்டுகளுக்கு மேலாகப் பதிப்புத்துறையில் வெற்றி கண்டு வருவது, இலக்கிய உலகம் நன்கு அறிந்ததே. *

கி. வா. ஜ., அகிலன், நா. பா., ராஜம் கிருஷ்ணன் போன்ற பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களுடன், என் நாவல், நாடகங்களையும் வெளியிட்டு ஆதரவு அளித்துவரும் அச்சங்கத்துக்கு நன்றி தெரிவிப்பது என் தலையாய கடமை யாகும். - -

பாரி நிலைய உரிமையாளர் திரு க. அ. செல்லப்பன் அவர்கள், தரங்கிணியின் இம்மூன்ரும் பதிப்பு செம்மையாக வெளிவருவதற்குப் பலவகையிலும் பேருதவி புரிந்திருக்கிரு.ர். நன்றி மறவா என் உள்ளம், அவரை என்றென்றும் வாழ்த்திக் கொண்டிருக்கும்.

தமிழ் வாசகர்களும் மாணவர்களும் தரங்கிணி"யை வரவேற்பார்களாக.

"ஜீவோதயம்' நாரண துரைக்கண்ணன் சென்னை-94 24–5–78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/9&oldid=575199" இலிருந்து மீள்விக்கப்பட்டது