பக்கம்:தரங்கிணி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

89.

ரேடியோகிராம்! பெட்டியிலிருந்து, ஞான செளந் தரி சினிமாப் பாடல்கள், மற்றும் ஏசு கிறிஸ்து குறித்து இசைவாணர்களும், இசைவாணிகளும் பாடிய பாடல்கள் இன்னிசை எழுப்பிக் கொண்டிருந்தன. சிருர்கள் அப் பெட்டியைச் சுற்றி நின்று, மகிழ்ச்சி யாரவாரஞ் செய்து கொண்டிருந்தனர். டேவிட் ரேடியோகிராம் பெட்டிக்குப் பாதுகாவலாக நின்று கண்காணித்துக் கொண்டிருந்தான்.

உறவினர்களும் நண்பர்களும் திரண்டிருந்த இக் கூட்டத்தினிடையே, காதரீன் கந்தருவ லோகத்துக் காரிகைபோல் பேரழகுடன் திகழ்ந்து கொண்டிருந்தாள். கபிலநிறமுடைய அவள் உடம்புக்கு, நீலப்பட்டாடையும் சிவப்பு வெல்வெட் சோளியும் கவர்ச்சியை அளித்தன. அவள் வழக்கமாக அணிந்துகொண்டிருக்கும் வளையல் களும், மீன்வடிவத்தில் அமைந்த தோடுகளும் தவிர, கழுத்தில் நவீன மோஸ்தர் பொன் சங்கிலியொன்று மட்டும் புதிதாக இடம் பெற்றிருந்தது. மோதிர விரலில், அழகிய சிறு கல் மோதிரமொன்று விளங்கிக் கொண்டிருந் தது. அவள் கைக்குட்டையால், அடிக்கடி முகத்தில் பூசி யுள்ள குட்டிகூரா என்ற நறுமணச் சுண்ணம் கலையாதபடி, வியர்வையை ஒத்தி எடுத்துக்கொண்டிருந்தாள்.

சிநேகிதிகள் சூழ்ந்துள்ள காதரீனிடம், உறவுப் பெண்கள் தாங்கள் கொண்டுவந்துள்ள பரிசுகளைத் தந்து விட்டு, வாழ்த்துத் தெரிவிக்கலாயினர். அவள் பரிசுகளே வாங்கி ஒருபுறம் வைத்துக் கொண்டே, அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தாள். -

ஆம்! காதரீனுக்குப் பிறந்த நாள் விழா. அதை அவள் பெற்ருேர் வழக்கம்போலப் பிரமாதமாகக் கொண்டாடி கொண்டிருந்தனர். அவர்களுக்கு அவள் ஒரே பெண்ணு தலால், பொன்னேபோல் போற்றிச் செல்லமாக வளர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/90&oldid=1338506" இலிருந்து மீள்விக்கப்பட்டது