பக்கம்:தரங்கிணி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

90

வந்தனர். சகோதரர்களும் அவளிடம் மிகவும் பிரியம் வைத் திருந்தனர். இது அவளுக்கு இருபதாவது பிறந்த நாள் கொண்டாட்டம். அவள் இப்போது கிறிஸ்தவப் பெண் கள் கல்லூரியில் பி. எஸ். ஸி., முதல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்ததால், விழாவை விமரிசையாகக் கொண் டாடலாயினர்.

எல்லோரும் காதரீன வாழ்த்தி வந்துக்கொண்டிருந் தாலும், அவள் கண்கள் மட்டும் அடிக்கடி வெளி வாயிலை நோக்கிக் கொண்டிருந்தது. பெற்ருேர் யாரையாயினும் வரவேற்று உபசரிக்கும் ஒலிகேட்டால், அவள் ஆவலுடன் வந்தவர்க்ளைப் பார்ப்பாள். தான் எதிர்பார்த்தவர் இல்லை என்று அறிந்ததும், அவள் முகம் அடுத்த கணம் ஏமாற்றத் தால் கூம்பிப் போகும். - -

"பாகீரதி, பார்த்தாயா? தரங்கிணியை இன்னுங் காணுேம். ஒரு வேளை வராமலே போய்விடுவாளோ?

அவள் குரலில் ஏக்கம் தொனித்தது.

"அப்படியெல்லாம் இருக்காது. அவள் எப்படியும், எவ்வளவு நேரமானலும் வந்து விடுவாள்.'

ஐரின் குறும்பாகக் குறுக்கிட்டுப் பேசிள்ை. "கேட் டாயா அடி சாரதா! நாம் இவ்வளவு பேர் வந்திருப்பது காதரீனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. தரங்கிணி வர வில்லையாம்; அதற்காகக் கவலைப்படுகிருள்; நிமிடத்துக்கு ஒரு தரங் கேட்டு.

'இது தெரிந்துதானே! போன்ஜன்மத்தில் இவர்கள் இருவரும் காதலர்களா யிருந்திருப்பார்கள். அதுதான் ஒருவர்மீது ஒருவர் இப்படி உயிரைவைத்துக் கொண்டிருக் கிருர்கள். இவர்களில் யாராயினும் ஒருவர் ஆணுகி விட்டால், பேசாமல் இருவருக்கும் திருமணஞ் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/91&oldid=1338507" இலிருந்து மீள்விக்கப்பட்டது