பக்கம்:தரங்கிணி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

91

வைத்துவிடலாம், சாரதா நையாண்டி செய்தவாறே, காதரீன் கன்னத்தை, அன்போடு நிமிண்டினள்.

காதரீன் நாண முற்று, பேசாமல் இருங்கள், அடி’ என்று அன்பாகக் கடிந்து கொண்டாள்.

கல்லூரியில் புதிதாகக் சிநேகமான மாணவிகள் இந்தத்தமாஷைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அழைக்கப்பட் டிருந்தவர்க்ளெல்லாம் பெரும்பாலும் வந்து விட்டனர். செல்லம்மாள், காதரீன் இருக்குமிடம் வந்தாள். அவளேயும், அவளைச் சூழ்ந்திருந்த பெண்களேயும் பார்த்துக் கொண்டே வந்தாள்.

'ஏன், காதரீன்! தரங்கிணி வரவில்லை போலிருக் கிறதே?” -

இக் கேள்வி காதரீனுக்குக் கண்ணிரையே வருவித்து விட்டது. -

"இன்னுங் கொஞ்சநேரம் பார்க்கலாம், அம்மா!' உறவின் முறைப் பெண்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

வெளியே நின்றிருந்த ஜோஸப் கைக்கடியாரத்தைப் பார்த்தான். மணி பதினென்ருகி விட்டிருந்தது. அவன் தற்செயலாக வீதியில் எட்டிப் பார்த்தான். தெருக்கோடி யில், தரங்கிணி அவசர அவசரமாக வந்து கொண்டிருந் ததை, அவனுடைய துருதுருத்த கண்கள் கண்டு விட்டன. உடனே அவனையறியாமலே அவன் தலை பின்னுக்கு இழுத்துக்கொண்டது. உடனே அவன் உள்ளே போக முயன்முன். - - -

இதைக் கவனித்த தங்கராஜ், இன்னும் யாராயினும் வந்தாலும் வருவார்கள். கொஞ்ச நேரம் இரு, ஜோஸப்' என்று சொன்னன். அண்ணன் சொன்னதை மீற முடியா மல், ஜோஸப் அப்படியே நின்றுவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/92&oldid=1338508" இலிருந்து மீள்விக்கப்பட்டது