பக்கம்:தரங்கிணி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

g?

சில நிமிடங்களில், தரங்கிணி அங்கு வந்து விட்டாள். வீதியிலிருந்து வீட்டுப் படியேறி உள்ளே வந்துகொண்டிருந் தாள். அவளை ஏறிட்டு நோக்கவோ, எதிர்கொண்டு அழைக்கவோ ஜோஸப்புக்குத் துணிவு ஏற்படவில்லை. ஆகவே, அவன் வாசல் அருகில் நின்றிருந்த தங்கராஜிடம் விரைந்து சென்று, அண்ணு தரங்கிணி வருகிருள், பார்: என்று சொல்லிவிட்டு, அவன் பின்னல் போய் ஒதுங்கி நின்றன். அவனுடைய நடத்ை தயைத் தங்கராஜினல் புரிந்துகொள்ள முடியவில்லை. வியப்புடன் பார்த்த அவன், இதற்குள் தரங்கிணி தங்களைக் கடந்து போய்க் கொண்டிருப்பதைக் கண்டுவிட்டு, வா. அம்மா! தரங்கிணி' என்று வரவேற்ருன். அ தற்குள் அவள் உள்ளே போய்விட்டாள்.

"தரங்கிணி வந்துவிட்டாள்" என்று, ஐரின்தான் முதலில் பார்த்துவிட்டுக் குரல் கொடு த்தாள். உடனே காதரீனச் சூழ்ந்து ஒரே கலகலப்பு உண்டாய்விட்டது.

எங்கே வராமல் போய்விடுவாயோ என்று நினைத் தேன், தரங்கிணி!" என்று கூறியவாறு, காதரீன் ஆர்வத் தோடு ஒரடி முன்வந்து, தன் இரு கரங்களையும் நீட்டி அவளை வரவேற்ருள். ஏதோ வேலையாய் உள்ளே போய் விட்டுவந்த செல்லம்மாள், தரங்கிணியைப் பார்த்துவிட்டு, "ஏன் இவ்வளவு நேரம், தரங்கிணி?” என்று அன்பாகக் கேட்டுக்கொண்டே நெருங்கிள்ை.

என்ன, குழந்தை எங்களையெல்லாம் இப்படிக் காக்க வைத்துவிட்டாய்?" -

சந்தோஷநாதம் பிள்ளை சிரித்தவாறே கேட்டார். .

- “s வருகிற வழியை எதிர்நோக்கி, காதரீனுக்குக் கண்ணும் நொந்திருக்கும்; கழுத்தும் வலியெடுத்திருக்கும்"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/93&oldid=1338509" இலிருந்து மீள்விக்கப்பட்டது