பக்கம்:தரங்கிணி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

§3.

"ஐயையோ!' என்று தரங்கிணி கையைப் பிசைந் தாள். என்னை மன்னித்திடுங்கள்.”

காதரீன் அவளை அன்பாகப் பற்றி, அப்பா சும்மா சொல்லுகிருரடி. அதற்குப்போய் நீ...?’ என்ருள்.

"யார் இவள்? இவளுக்கு இவ்வளவு வரவேற்பு? சுற்றத்தார் பலர் நெஞ்சங்களில் இப்படிக் கேள்வி எழுந்தது. கல்லூரியின் புதுத்தோழிகளும் வியப்போடு பார்த்தனர். பார்த்தவர்கள் கண்களெல்லாம், தரங்கிணி யின் அழகிய உருவத்தின்மீதே நிலைத்து நின்றுவிட்டன. எல்லோருடைய கண்களும் தன்மீது பதிந்திருப்பதைத் தற்செயலாகக் கவனித்துவிட்ட தரங்கிணி, நாணத்தோடு காதரீனுக்குப் பின்னே போய் நின்றுகொண்டாள். அவ் விதம் போவதற்குமுன், அவள், காதரீனிடம் தான் கொண்டுவந்த ஒரு படத்தை நீட்டி, "இது என் எளிய அன்புப் பரிசு, உன் பிறந்த நாளுக்கு. இதுபோல நீ பல பிறந்த நாட்களைக் கொண்டாடி, வாழ்க்கையில் எல்லா நலன்களையும் நற்பேறுகளையும் பெறவேண்டும். அதற்கு ஆண்டவன் கருணை உனக்குப் பூரணமாக இருக்கும்’ என்று, நெஞ்சந் தழுதழுக்க வாழ்த்தினள்.

  • நீகூட எனக்குப் பரிசு கொடுக்க வேண்டுமா, தரங்கிணி?” என்று சொல்லிக்கொண்டே தோழி தந்த படத்தைப் பார்த்தாள் காதரீன். கிறிஸ்து பெருமான் ஆட்டிக்குட்டி யொன்றைத் தம் தோளில் தாங்கிக் கொண்டு தடி பிடித்தவாறு நிற்பதை, தரங்கிணி மிக அழகாக எம்பிராய்டரி செய்திருப்பதைக் கண்டு, காதரி னுக்கு அளவிலா ஆனந்தமுண்டாயிற்று. அவள் அப்படத் தைக் கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

இச்சமயம், செல்லம்மாள், 'காதரீன், உன் தோழி தளையெல்லாம் அழைத்துக்கொண்டு இங்கே வா!' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/94&oldid=1338510" இலிருந்து மீள்விக்கப்பட்டது