பக்கம்:தரங்கிணி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

94

பரிவோடு அழைத்தாள். அவ்விதமே அவள், எல்லோரும் வாருங்கள் போகலாம்' என்று கூப்பிட்டுக் கொண்டு வந்தாள்.

கூடத்தின் நடுவே ஒரு வட்ட மேஜைமீது, ஒருதட்டில் கிறிஸ்துமஸ் கேக் போன்ற ஒரு பெரிய கேக் வைக்கப்பட் டிருந்தது. அதைச் சுற்றிலும் மெழுகு வத்திகள் ஏற்றி வைக்கப்பட்டுருந்தன. தாயின் கட்டளேப்படி, காதரீன் அதன் அருகே சென்று குனிந்து வாயால் ஊதி, மெழுகு வத்திகளை அணைத்தாள். பின், தட்டில் ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்துக் கேக்கை வெட்டித் துண்டுதுண்டாகப் பெற்ருேருக்கும் மற்றவர்களுக்கும் முறையாக வழங்கிவந்தாள். பின் தானும் எடுத்து உட் கொள்ளலாள்ை. அதற்கு முன்பே ஐரின் தனக்குக் கொடுக்கப்பட்ட கேக் துண்டை அவள் வாயில் திணித் தாள்.

பின் தோழிகள் அனைவருஞ் சேர்ந்து Happy birth day to you என்று சொல்லிப் பாட்டுப் பாடலாயினர்.

இவ்வளவு ஆர்ப்பாட்டத்திலும், காதரீன் தரங்கிணி கேக் சாப்பிடமாட்டாள் என்று, ஆப்பிள், சாற்றுக்குடி, மாம்பழம், வாழைப்பழம் முதலியவைகளைக் கொடுத்து வற்புறுத்தித் தின்னச் சொன்னுள்.

பின் காதரீன், தன் தோழிகளை உறவுப்பெண்களுக் குப் பரஸ்பரம் அறிமுகப்படுத்தினுள். தரங்கிணிக்கு ஒரு குடும்பத்தைச் சுட்டிக்காட்டி, இவர்கள் எங்களுக்கு மிக நெருங்கிய உறவினர்கள்! இவர்களுக்கு ஒரு பெண் இருக் கிறதாம். எங்கள் பெரிய அண்ணனுக்குக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிருர்கள். அப்பாவுக்கும் வம்மாவுக்கும்கூடச் சம்மதந்தான். ஆணுல் அண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/95&oldid=1338511" இலிருந்து மீள்விக்கப்பட்டது