பக்கம்:தரங்கிணி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

95

இதற்கு இன்னும் இசைவு தெரிவிக்கவில்லை. 'எனக்கு இப் போது கலியாணம் வேண்டாம். முதலில் காதரீனுக்கு ஆகட்டும். அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லி வருது. எனக்குமட்டும் இப்போது என்ன அவசரமாம். நான் படித்து முடிக்க வேண்டாமா...' என்று கொஞ்சலாகச் சொன்னாள். அவ்விதஞ் சொல்லும்போது, அவள் முகத்தில் பெருமிதம் தோன்றியது.

தரங்கிணி சும்மா கேட்டுக் கொண்டிருந்தாளே யொழிய, வாய்திறந்து பதிலுக்கு ஒன்றுஞ் சொல்லவில்லை. காதரீன் அவளைக் கடைக்கணிக்கலானன். பின் அவள் தரங்கிணியை அக் கூட்டத்திலிருந்து பிரித்துச் சாதுரிய மாக ஒரு பக்கம் அழைத்துக் கொண்டுபோய், "உன் கலியான விஷயம் என்ன ஆச்சு தரங்கிணி!" என்று ஆதுரத்துடன் கேட்டாள்.

'ஒன்றுந் தெரியவில்லை. அப்படியேதான் இருக்கு." அவள் சொல்லில் உயிரேயில்லை.

காதரீன் தரங்கிணியின் முகத்தைப் பாசத்தோடு தன் பக்கந் திருப்பி, 'ரொம்ப இளைத்துப் போயிருக்கிருயே, தரங்கிணி? உன்னை அழைக்க வந்தபோது பார்த்ததைவிட இன்னும் மொசமாய் விட்டிருக்கிருயே? ஒரு வாரத்தில் எவ்வளவு மாறுதல்? முகமெல்லாம் வெளிறி வாடி வதங் கிக் கைகால் எல்லாம் நேர்ந்துபோய்......? உன் நிலையை நினைத்தால் என் உள்ளமெல்லாம் பற்றி எரிகிறது, தரங் கிணி! கடவுள் மிகவும் கொடுமையானவன் அடி" என்று அங்கலாய்ப்போடு பேசிள்ை. -

தோழியின் உருக்கமான பேச்சு, தரங்கிணிக்குக் கண்ணிரை வருவித்துவிட்டது. ஆனலும், அவள் தன்னைச் சமாளித்துக்கொண்டு, "எல்லாரும் உன்னை எதிர்பார்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/96&oldid=1338512" இலிருந்து மீள்விக்கப்பட்டது