பக்கம்:தரங்கிணி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

96

திருக்கிரு.ர்கள் போலிருக்கு. வா போவோம் என்று அழைத்தவாறு, பேச்சை மாற்ற முயன்ருள்.

'எனக்கு இப்போது அங்கு ஒன்றும் வேலையில்லை. சும்மா இரு' என்று சொல்லிய காதரீன், "நீதான் இப்போ தெல்லாம் இங்கு வருவதையே அடியோடு நிறுத்தி விட்டாய். எவ்வளவோ காலங் கழித்து வந்திருக்கிருயே இப்போதாயினும், உன்னிடம் சிறிது நேரம் பேசலாம் என்ருல், தட்டிக் கழித்துவிட்டுப் போகப் பார்க்கிருயே, தரங்கிணி! நீ ரொம்பக் கல்நெஞ்சுக்காரியடி!...” என்ருள்.

"அப்படித்தான் இருக்கட்டுமே!’ 'நீ ஏன் முன்போல வருவதில்லை? உங்கள் வீட்டில் இங்குப் போக வேண்டாம் என்கிருர்களா?...:

தரங்கிணி தலைகுனிந்து மெளனமாயிருந்தாள். "நான் அங்க்ே வந்து உன்னைப் பார்க்கலாம் என்ருல், ஆசர்ரம் மிகவுடைய உன் அம்மா, ஏதாயினும் சொல்லி விட்டால் என்ன செய்வது என்று பயம். ஒருவேளை உன் தாய் சும்மா இருந்தாலும், உங்க வீட்டுக்கு வருகிற வைதீகப் பிச்சுகள் வம்பளக்க ஆரம்பித்துவிடுவார்களே என்ற எண்ணத்தால்தான், எனக்கு உன்னைப் பார்க்கவரத் தயக் மாயிருக்கு. இல்லையானல்...?"

காதரீன்! எங்கே இருக்கிருய்?" செல்லம்மாள் கூப்பிடுவது, இருவரையும் சூழ்நிலையை உணர வைத்தது.

"காதரீன்! அம்மா கூப்பிடுகிரு.ர். வா, போவோம்."

தரங்கிணி அவள் கையைப் பற்றி அழைத்துச் சென்ருள். o .

காதரீன் தோழியை இரக்கமாகப் பார்த்து, "தரங் கிணி என்னை மறக்கமாட்டாயே! சந்தர்ப்பம் நேரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/97&oldid=1338513" இலிருந்து மீள்விக்கப்பட்டது