பக்கம்:தரங்கிணி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

98

ஊகித்துக் கொண்டான். தான் வரம்புமீறி அவளிடம் நடந்துகொண்டது அவளுடைய மென்மையான உள்ளத்தை நைவித்திருக்கும் என்றும், அவன் மனம் அவனை இடித்துரைத்துக் கொண்டிருந்தது.

தன்னைக் கண்டால் நாகப்பாம்பைக் கண்டு அஞ்சுவது போல் வெறுத்து ஒதுக்கும் தரங்கிணி, இன்று யாருங் கவனியாத சமயம் பார்த்து, தன்னிடம் ஒரு கடிதத் துண் டைத் தந்துவிட்டுச் சென்றதை எண்ணிப் பார்த்தபோது, ஜோஸப்பின் உடம்பு முழுவதும் புல்லரித்தது. அவன் எங்கேயோ வெளியே போய்விட்டு வந்தபோது, கூடத்தில் காதரீனும் தரங்கிணியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந் ததைக் கண்டு வியப்யுற்றன். ஏனென்முல், இதுவரை தரங் கினி தங்கள் வீட்டுக்கு காலை நேரத்தில் வந்து அவன் பார்த்ததில்லை. வெளியேயிருந்து கூடத்துப் பக்கமாக வந்தவன், தரங்கிணியைக் கண்டுவிட்டுத் தன் அறைக்குள் விரைவாக நுழைந்துவிட்டான். ஒருநாள் கடுமையாக கண்டித்துப் பேசிவிட்டுப் போனபின், தரங்கிணி, கூடுமான வரை ஜோஸப் பார்வையில் படுவதில்லை. அவன் வந்தால், அவள் உடனே எழுந்துபோய் விடுவாள். அவ்விதம் இருந்து வந்தவள் இன்று அவன் வந்ததைப் பார்த்த பின்னரும், அவள் காதரீனிடம் பேசிக் கொண்டிருந்தாள். பின் கட்டி லிருந்து செல்லம்மாள் குரல் கொடுக்கவே, என்ன என்று கேட்க, காதரீன் எழுந்து போகலாள்ை. இவ்விதமான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவள்போல், தரங்கிணி சடக்கென எழுந்து இருபுறமும் பார்த்துவிட்டு, ஜோஸப் அறைப்பக்கம் சென்று, தொண்டையைக் கனைத்து அவன் கவனத்தைத் தன்வசம் ஈர்த்துத் தான் கைப்பையில் வைத் திருந்த ஒரு கடிதத்துண்டை எடுத்து அவனை நோக்கி வீசி எறிந்துவிட்டுத் திரும்பினள். அவளுடைய இச் செயல் ஜோஸபுக்கு அளவிலா ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/99&oldid=1338515" இலிருந்து மீள்விக்கப்பட்டது