பக்கம்:தராசு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

திருக்கிறேன். நமது புராதன ஸங்கீதத்துக்கு நிகரானது இவ்வுலகத்தில் வேறெங்கு மில்லை என்பது என்னுடைய முடிவு. கவிதை விஷயத்திலும் இப்படியே.

இனி கணிதம், ரஸாயனம் முதலிய வேறு பல சாஸ்திரங்களும் நமது தேசத்திலே தான் முதலில் வளர்ச்சி பெற்றவையாகும்.

நாம் இஹலோகத்து அறிவிலும் மேம்பாடு பெறவேண்டும். தெரியாத சாஸ்திரங்களின் ஆரம்பங்களைப் பிறரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அவற்றை நமது ஊக்கத்தாலும் உயர்மதியாலும் மேன்மேலும் வளர்ந்து மீளவும் உலகத்தாருக்கு ஊட்ட வேண்டும். இஹலோக வளர்ச்சியிலே நாம் தலைமை வகிக்க வேண்டும். அதற்கு நாமே தகுதியுடையோர்.

🞸🞸🞸

பம்பாயில் நடக்கப் போகிற காங்கிரஸ் ஸபைக்குப் பல ஊர்களிலிருந்து பிரதிநிதிகள் வருவதிலே சில மாதர்களும் பிரதிநிதிகளாக வரக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண் பிரதிநிதிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்யும் பொருட்டு தர்ம ஸேவர்களாக (வாலண்டியர்களாக) ஆண்பிள்ளைகள் முற்பட்டு வந்திருப்பது போலவே, பெண் பிரதிநிதிகளுக்கு வேண்டிய உபகாரங்கள் செய்வதற்காக தர்மஸேவகப் பெண்கள் சிலர் முற்பட்டிருப்பதாகத்

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/12&oldid=1771104" இலிருந்து மீள்விக்கப்பட்டது