பக்கம்:தராசு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

எங்கே மேன்மேலும் விரிகின்ற கருத்திலும் செய்கையிலும் அறிவு மூண்டு செல்லும்படி நீ நடத்துகிறாய்;

அமரஸ்தானமாகிய அந்த ஸ்வதந்த்ர நிலையில், ஹே பிதா, எனது தேசம் கண்விழித்திடுக.”

குறிப்பு:— அமரஸ்தானம்—தேவலோகம்; ஸ்வதந்த்ரம்—விடுதலை; பிதா—கடவுள்.

“மொழி பெயர்ப்பிலே பிழையில்லை. ஆனாலும், இன்னும் சிறிது சுலபமான நடையில் இருக்கலாம்” என்று தராசு சொல்லிற்று.

🞸🞸🞸

“பூசனிக்காய் சங்கதி சொல்லட்டுமா?” என்று நண்பர் செட்டியார் கேட்டார்.

“அதென்னையா?” என்று எல்லாரும் வியப்புடன் செட்டியாரைக் கேட்டார்கள்.

செட்டியார் சொல்லுகிறார்:- ”சில தினங்களின் முன்பு சென்னப்பட்டணத்தில் பொருட்காட்சி பார்க்க பத்திரிகையின் மனிஷரொருவர் போயிருந்தார். அங்கே ஸாமான்யமாகக் கிடைக்ககூடிய மிகவும் பெரிய பூசனிக்காயைக் காட்டிலும் அதிகப் பெரிதாகிய ஒரு பூசனிக்காய் இருந்தது. ‘சாஸ்திர-எரு’ப் போட்டதனால் இந்தப் பயன் உண்டாயிற்றென்று தெரிகிறது. ஒரு புல் முளைக்கிற இடத்தில் இரண்டு புல் முளைக்கும்படி செய்பவன் தேசத்துக்குப் பெரிய

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/16&oldid=1771106" இலிருந்து மீள்விக்கப்பட்டது