பக்கம்:தராசு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

உபகாரி’ என்று இங்கிலிஷ்காரர் சொல்வதுண்டு. ‘தொகைக் குள்ளது அளவுக்கும் உண்டு’ என்று அந்தப் பத்திரிகைக்காரர் சொல்லுகிறார். அதாவது, சிறிய இலை தரும் வாழையைப் பெரிய இலையைத் தரும்படி செய்பவனும் தேசத்துக்குப் பெரிய உபகாரியாவான். ’பெரிய பூசனிக்காய் மற்றப் பூசனிக்காய்கள் பார்த்துக் கொஞ்சம் வெட்கப்பட்டது போல விழித்தன. ஆனால் நமது பூர்வீகர்களிருந்த அளவு நமக்கும் போதும் என்று ஒருவித வைதீகத் தோற்றமும் அந்தப் பூசனிக்காய்களின் முகத்திலே தென்பட்டது’ என்று அந்தப் பத்திரிகைக்காரர் எழுதியிருக்கிறார்.”

இவ்வாறு செட்டியார் சொல்லிக்கொண்டு போகையில், நான் அவரை நோக்கி:- “ஆமாங்காணும், அதற்கென்ன இப்போது? ஆலோசனைக்கு என்ன விஷயம் கொண்டு வந்திருக்கிறீர்?” என்று கேட்டேன்.

செட்டியார்:- “ஆலோசனை ஒன்றுமில்லை. ஊயரே, சம்மா ஒரு கதை சொன்னேன்.”

தராசு:- “சரி மேலே வியாபாரம் நடக்கட்டும்” என்றது.

🞸🞸🞸

“உங்க ஹிந்துக்களுடைய நாலு வேதத்துக்கும் பெயரென்ன?” என்று ஜிந்தாமியான் ஸேட் கேட்டார்.

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/17&oldid=1771107" இலிருந்து மீள்விக்கப்பட்டது