பக்கம்:தராசு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

“ரிக், யஜுஸ், ஸாமம், அதர்வணம்” என்றேன். “எதுக்குக் கேட்கிறீர்?“ என்று செட்டியார் கேட்டார். அதற்கு ஜிந்தாமாயின் ஸேட் சொல்வதானார்:- “கேள்விப்பட்டேன், நேற்று பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் நம்ம கடைக்கு வந்திருந்தார். அவர் சொன்னார்:- ‘ஹிந்துக்களுடைய வேதம் மிகவும் பழைமையானது. அதிலும் நம்ம குரானைப் போலவே அல்லாவைத் தான் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் அல்லா என்கிறதுக்கு அவர்களுடைய பாஷையிலே ப்ரஹ்ம என்கிறார்கள். அதிலே ரிஷிகள் என்று பாடினவர்கள் அல்லாவினுடைய உண்மையை அறிந்தவர்கள்.’ இன்னும் அந்த சாமியார் ஏதெல்லாமோ சொன்னார். அதிலிருந்து ஞபாகம் உண்டாயிற்று.“

“வேதம் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்களோ?“ என்று மற்றொருவர் கேட்டார்.

“இல்லை“ என்றேன்.

“என்ன காரணம்?“ என்றார் கவிராயர்.

“அதற்குத் தகுந்த திறமையுடைய பண்டிதர்கள் இல்லை. ஒரு வேளை இருந்தாலும், அவர்கள் தொழில் செய்யவில்லை.“

“ஆமாம் வேதத்துக்குப் பலவிதமாக அர்த்தஞ் சொல்லுகிறார்களாமே? என்ன காரணம்?“ என்று செட்டியார் கேட்டார்.

“மற்றொரு முறை அந்த விஷயம் பேசுவோம். வேறேதேனும் வியாபாரமுண்டோ?“ என்றேன்.

🞸🞸🞸

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/18&oldid=1770142" இலிருந்து மீள்விக்கப்பட்டது