இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தராசு
ஸயன்ஸ் என்பதென்ன?
ஐரோப்பிய இயற்கை நூலுக்கு இங்கிலீஷ் பாஷையில் ஸயன்ஸ் என்று பெயர்.
“ஐரோப்பிய இயற்கை நூல்” என்று தனியாக ஒரு சாஸ்திரமுண்டா?
அப்படியில்லை. அந்த சாஸ்திரத்திலே நம்மைக் காட்டிலும் அவர்கள் அதிகத் தேர்ச்சி யடைந்திருக்கிறார்கள்.
அதிலே என்ன பயன் உண்டாகிறது,
புதிய விழி உண்டாகிறது.
புதிய விழி என்பதென்ன?
பூமண்டலத்தையும் ஸர்வத்தையும்பற்றிய புதிய அறிவு.
நமது பூர்வீகங்களுக்கு இல்லாத அறிவு இப்போது சாத்தியப்படுமா?
அதைப் பற்றிய பேச்சில்லை.
நமக்கு இதுவரை இல்லாத அறிவு இப்போது சாத்தியப்படுமோ?
"முற்படுக; எழுக;" என்றது தராசு.
🞸🞸🞸
சென்னை சட்டசபையிலே ஜனங்களுக்குச் சார்பான காரியஸ்தர்கள் சில நல்ல தீர்மானங்கள்செய்து
18