பக்கம்:தராசு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

யிருப்பது போல என் புத்திக்குப் புலப்படுகிறது. ‘ஹிந்து’ பத்திரிகையில் இதைப் பற்றி ஒரு தந்தியிருக்கிறது. வாசித்துக் காட்டுகிறேன்” என்று அந்த நண்பர் சட்டைப் பையிலிருந்து ஒரு காயிதத்தை எடுத்தார்.

”ஓய் சுருக்கமாக இருந்தால் படியும். இல்லாவிட்டால், வாயினால் அதன் ஸாராம்சத்தச் சொல்லிவிடும். வீண் கதை கேட்க நமக்கு நேரமில்லை” என்றேன்.

அவர் பின்வருமாறு படித்ததுக் காட்டினார்:— புதுக்கோட்டை ராஜா தமது பிரஜைகளுக்குச் செய்த பிரசங்கத்திலே சொல்லுகிறார்:- ”என் குடிகளே, எனது பத்தினிக்கு நீங்கள் செய்த ராஜோபசாரத்தால் என்ன விளங்குகிறது? என்னையும், எனது ராஜ்யத்தையும் பற்றிய ஸகல விஷயங்களிலேயும் நீங்கள் எனது தீர்மானத்தை பக்தி விசுவாத்தடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறீர்களென்பது தெளிவாகிறது. என்னையும் எனது ராணியையும் வரவேற்பதில் நீங்கள் செய்த ஆனந்த கோஷங்களினால் என்ன தெரிகிறது? வைதிக ஆசாரங்களுக்கு விரோதமாகத் தோன்றக்கூடிய செய்கைகளிலேகூட நீங்கள் சிறிதேனும் திகைப்பில்லாமல் என்னிடம் ராஜபக்தி செலுத்துவீர்களென்று தெரிகிறது. சில வருஷங்களாக எனது விவாகத்தைப் பற்றி ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டு வந்தேன். இன்னவிதமான பத்தினி இருந்தால் நான் நமக்குக் குடும்ப சந்தோஷமும், ராஜ்யபாரத்திலே உதவியும் உண்டாகுமென்பதைப்

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/21&oldid=1770149" இலிருந்து மீள்விக்கப்பட்டது