தராசு
பற்றி என்னுடைய பயிற்சியிலிருந்தும், யாத்திரைகளிலிருந்தும் எனக்குச் சில விசேஷ அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருந்தன. நமது ஜன ஸமூஹம் இப்போதிருக்கும் நிலைமையில் நான் விரும்பிய குணங்களுடைய ஸ்திரீ நமக்குள் அகப்படுவது சாத்தியமில்லையென்று கண்டேன். இதற்காக சுதேசிய அபிமானத்தின் வெளித்தோற்றத்தைக் கொஞ்சம் இழந்து விடுதல் அவசியமென்றும் நிச்சயித்தேன். ‘சுதேசிய அபிமானத்தின் வெளித்தோற்றம்’ என்று சொல்லுகிறேன். ஏனென்றால் எத்தனையோ அன்னிய தேசங்களிலே பிறந்தாலும் தாம் சுவீகாரம் செய்துகொண்ட தேசத்தாருடன் பரிபூர்ணமாக ஒற்றுமைப்பட்டுப போவதை நாம் அறிவோம். இத்தனை காலம் கழித்துக் கடைசியாக எனது அபீஷ்டங்களுக்கு இணங்கிய பத்தினியை எனக்கு ஈசன் அருள் செய்திருக்கிறார். எங்களிருவருடைய ஆட்சியிலே இந்த ராஜ்யம் முன்னைக் காட்டிலும் அதிக க்ஷேமத்துடனும் ஸந்தோஷத்துடனும் இருக்குமென்று நம்புகிறேன்” என்பதாக அந்த நண்பர் ஒரு மட்டில் வாசித்து முடித்தார்.
“சரி, அனுபவக் குறைவினால் சொல்லி விட்டார். அஹல்யா பாயி முதலிய ஹிந்து ராணிகளைப் பற்றி அவர் தக்க ஆராய்ச்சி செய்ததில்லை“ என்று ஜவாப் தெரிவித்தேன்.
“அடா, இப்போது கூட பரோடா மஹாராணி இல்லை?“ என்று மற்றொருவர் குறுக்கிட்டார்.
21