இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தராசு
“வேறு விஷயம் பேசுவோம்” என்று சொல்லிவிட்டேன்.
தீர்ப்பு எப்படியிருக்குமென்பதை நீங்களே ஊஹித்துக் கொள்ளலாம்.
4
நேற்று மாலை தராசுக் கடைக்கு சதுரங்க பட்டணத்திலிருந்து ஒரு மாத்வ (ராவ்ஜீ) வாலிபன் வந்தான். “தராசுக் கடை இதுதானா?“ என்று கேட்டான். “ஆம்“ என்றேன். என் பக்கத்திலிருந்த தராசை ஒரு கோணப் பார்வையாகப் பார்த்தான். கொஞ்சம் மீசையைத் திருத்திவிட்டுக் கொண்டான். மூக்குக் கண்ணாடியை நேராக்கிக் கொண்டான். மனதுக்குள் ஏதோ இங்கிலீஷ் வார்த்தைகள் சொல்லிக் கொண்டான். என்னை ஒரு பார்வை பார்த்தான்.
“நான் கேட்கிற கேள்விக்கு விடை நீர் சொல்லுவீரா? இந்தத் தராசு சொல்லுமா?“ என்று கேட்டான்.
“தராசு தான் சொல்லும்“ என்றேன்.
22