தராசு
அதை உம்முடைய கீர்த்திபெற்ற தராசினிடம் ஆராயச்சி செய்ய வந்தேன்” என்றான்.
“ஆராய்ச்சியா?“ என்று தராசு கேட்டது.
அதற்கு வாஸுதேவன் சொல்லுகிறான்:— “ஆம்! ஆராய்ச்சி; அதாவது பரியாலோசனை; இதை இங்கிலிஷில் ‘கன்சல்டேஷன்’ என்று சொல்வார்கள். இங்கிலீஷ் பாஷையில் சொல்லக்கூடிய ‘ஐடியாஸ்‘ நம்முடைய தாய்ப் பாஷைகளில் சொல்ல முடியவில்லை. ‘நெவர்மைண்ட்‘ அதுவே விஷயம். ‘கிப்ளிங்‘ என்ற இங்கிலீஷ் கவிராயர் சொல்வது போலே, ‘அது மற்றொரு கதை‘; நான் கேட்க வந்த விஷயத்துக்கு விடை சொல்ல வேண்டும்" என்றான்.
அப்போது நான் வாஸுதேவனை நோக்கி, ‘நீ ஏன் கேட்கிறாய்? நீ பட்டாளத்தில் சேரப் போகிறாயா?‘ என்றேன்.
அதற்கு வாஸுதேவன்:— ‘ஆஹா! நான் சேர்வதென்றால் ஏதோ ஸாமான்யமாக நினைத்துவிட வேண்டாம். எனக்குச் சென்னப்பட்டணம் முதல் டின்னவெல்லி வரைக்கும் ஒவ்வொரு முக்கியமான ஊரிலும் ஸ்நேஹிதர் இருக்கிறார்கள். நான் சேர்ந்தால் அவர்களத்தனைபேரும் சேர்வார்கள்; நான் சேராவிட்டால் அவர்கள் சேர மாட்டார்கள்‘ என்றான்.
தராசு கட கட கட வென்று சிரித்தது.
வாஸுதேவனுடைய கன்னங்கள் சிவந்து போயின. மூக்குக் கண்ணாடியை நேரே வைத்துக்
24