பக்கம்:தராசு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

நேற்றுக் காலை, தராசுக் கடைக்கு வெளி ஜனங்கள் யாரும் வரவில்லை. ஜிந்தாமியான் ஸேட் வந்து உட்கார்ந்தார். வழக்கம் போல வேடிக்கை பார்க்க வந்தாரென்று நினைத்தேன்.

“சேட் ஸாஹேப், என்ன விசேஷம்?” என்று கேட்டேன்.

“தராசினிடம் சில கேள்விகள் கேட்க வந்தேன்“ என்றார்.

“சரி கேளும்“ என்றேன்.

“தர்ம ப்ரஸங்கம் செய்யத் தகுதியுடையோர் யார்?“ என்று கேட்டார்.

தராசு சொல்லிற்று:— “கலங்காத நெஞ்சுடைய ஞான தீரர்.“

“அப்படியில்லாதோர் தர்ம ப்ரஸங்கம் செய்யத் தலைப்பட்டாலோ?“

தராசு, “மற்றோர் அதை கவனிக்கக்கூடாது“ என்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/36&oldid=1770445" இலிருந்து மீள்விக்கப்பட்டது