பக்கம்:தராசு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

சௌகர்யமில்லாமையால் கொடுக்காதிருப்போர் முன்யோசனையற்றவர்கள். இவர்களை நல்ல சவுக்கினால் இரண்டடி அடித்துவிட்டுப் பின் முகதரிசனமில்லாமல் இருக்கவேண்டும். வருகிறேனென்று சொல்லி வராதவர்களையும், இதைப்போலவே இரண்டு பகுதிகளாகக்கிக் குற்றத்திற்குத் தக்கபடி சி¨க்ஷ விதிக்க வேண்டும்.“ இதைக் கேட்டு ஜிந்தாமியான் சில நிமிடங்கள் வரை ஒன்றும் பேசாமல் யோசனை செய்து கொண்டிருந்தார். பிறகு நான் அவரை நோக்கி, “இன்னும் ஏதேனும் கேள்வியுண்டா?“ என்றேன். “ஒன்றுமில்லை” என்று சொல்லி விட்டார்.

🞸🞸🞸

தராசைக் கட்டி உள்ளேவைத்துவிட்டுக் கடையை மூடிய பிறகு நானும் ஜிந்தாமியான் ஸேட்டும் வீட்டுக்குத் திரும்பினோம். வரும் வழியிலே நான் ஸேட்டைப் பார்த்து “ஸேட் ஸாஹேப், ‘வருகிறேனென்று வாராதவர், தருகிறேனென்று தராதவர்’ என்பதாக ஏதோ நீண்ட கேள்வி கேட்டீரே; மனதில் எதை வைத்துக் கொண்டு கேட்டீர்?“ என்றேன்.

ஸேட் மறுமொழி சொல்லாமல் புன்சிரிப்புச் சிரித்தார்.

“வியாபார விஷயமோ?“ என்றேன்.

“இல்லை“ என்று தலையை அசைத்தார்.

“குடும்ப விவகாரமோ?“ என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/38&oldid=1770546" இலிருந்து மீள்விக்கப்பட்டது