பக்கம்:தராசு.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு



வ்வுலகமே ஈசனுடைய “விளையாட்டு. “உலகத்தை அறிய வேண்டுமானால் விளையாட்டுப் பழக்கமும் வேண்டும்...... எழுதும் விஷயங்களுக்கு என்ன மகுடம் ஏற்படுத்தலா மென்ற யோசனை உண்டாயிற்று. பலவிதமான செய்திகளையும் கலந்து பேச நேரிடுமாதலால் “பலசரக்குக் கடை” என்று மகுடமெழுத உத்தேசித்தேன். அது விளையாட்டாக முடியுமாதலால் விட்டுவிட்டேன். எனக்கும் ஒரு செட்டியாருக்கும் சினேகம்; அவரைப்போல் நாம் ஒரு பலசரக்குக் கடை வைத்தால் அவருக்குக் கோபம் ஏற்படுமென்று கருதி அந்த மகுடத்தை விலக்கினேன்........“தராசு” என்று பொதுப்படையாகப் பெயர்வைத்திருக்கிறேன். எல்லா வஸ்துக்களையும் நிறுத்துப் பார்க்கும்; எல்லாச் செட்டியாருக்கும் இதனால் உதவி யுண்டு. எந்தச் செட்டியாரும் நம்மிடம் மனஸ்தாபங்கொள்ள இடமிராது.


சி. சுப்பிரமணிய பாரதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/4&oldid=1771095" இலிருந்து மீள்விக்கப்பட்டது