பக்கம்:தராசு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

மைசூரிலிருந்து நம்முடைய கடைக்கு ஒரு ஐயங்கார் வந்தார். “என்ன தொழில்?” என்று கேட்டேன்.

“சமாசாரப் பத்திரிகைகளுக்கு விஷய தானம் செய்து ஜீவிக்கிறேன்“ என்று இங்கிலீஷிலே மறுமொழி சொன்னார். இங்கிலீஷ் பத்திரிகைகளுக்கு" என்றார். “நல்ல லாபமுண்டா?“ என்று கேட்டேன்.

“ஒரு பத்திக்கு 6 ரூபாய் கிடைக்கிறது. மாதத்திலே ஏழெட்டு வியாஸந்தான் எழுத முடிகிறது. ஒரு வியாஸம் அனேகமாக ஒரு பத்திக்கு மேலே போகாது. என்னுடைய வியாஸங்களுக்கு நல்ல மதிப்பிருக்கிறது. சில சமயங்களில் எனது வியாஸமே தலையங்கமாகப் பிரசுரம் செய்யப்படுகிறது. ஆனாலும், அதிக லாபமில்லை. சிரமத்துடனே தான் ஜீவனம் நடக்கிறது. அன்றன்று வியாஸமெழுதி அன்றன்று பசி தீர்கிறது. எனக்கு இரண்டு குழந்தைகள். அந்தக் குழந்தைகளையும் பத்தினியையும் ஸம்ரக்ஷணை பண்ண இத்தனை பாடு படுகிறேன்“ என்று இங்கிலீஷிலே சொன்னார்.

“இவருக்குத் தமிழ் தெரியாதோ?“ என்று தராசு கேட்டது.

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/41&oldid=1770554" இலிருந்து மீள்விக்கப்பட்டது