தராசு
ஐயங்கார் சொன்னார், இங்கிலீஷில்:— “தமிழ் தெரியும், நெடுங்காலம் கன்னட தேசத்தில் பழகின படியால் தமிழ் கொச்சையாக வரும். அதனால் இங்கிலீஷில் பேசுகிறேன்.”
தராசு சொல்லுகிறது:— ”கொச்சையாக இருந்தால் பெரிய காரியமில்லை. சும்மா தமிழிலேயே சொல்லும்.”
ஐயங்காருடைய முகத்தைப் பார்த்தபோது அவர் ஸங்கடப்படுவதாகத் தோன்றிற்று. அதன் பேரில், ஐயங்கார் இங்கிலீஷிலேயே வார்ததை சொல்லும்படிக்கும், நான் அதைத் தராசினிடத்திலே மொழிபெயர்த்துச் சொல்லும்படிக்கும் தராசினிடம் அனுமதி பெற்றுக் கொண்டேன்.
தராசு கேட்கிறது:— ”ஐயங்காரே, கையிலே என்ன மூட்டை?”
ஐயங்கார் ”பத்திரிகை வியாஸங்களைக் கத்தரித்து இந்தப் புஸ்தகத்திலே ஒட்டி வைத்திருக்கிறேன். ஸம்மதமுண்டானால் பார்வையிடலாம்” என்று அந்த மூட்டையைத் தராசின் முன்னே வைத்தார். தராசு அந்தப் புஸ்தகத்தைப் பரிசோதனை செய்து பார்த்து, ”நன்றாகத்தான் இருக்கிறது” என்றது.
இதைக் கேட்டவுடனே ஐயங்கார்;— ”யூ சீ மிஸ்டர் பாலன்ஸ்” என்று தொடங்கி .... (அடடடா! இங்கிலீஷில் அப்படியே எழுதுகிறேன்; வேறெங்கேயோ ஞாபகம்) என்றார்.
41