தராசு
அப்போது தராசு சொல்லுகிறது:— “ஆங்கிலேயரே, உம்மைப் பார்த்தால் நல்ல மனிதனாகத் தெரிகிறது. பொறுத்துக் கொண்டிரும். இந்த ஐயங்கார் கேள்விகள் போட்டு முடித்த பிறகு உம்மிடம் வருவோம்.“ “ஐயங்காரே, தம்முடைய கேள்விகள் நடக்கலாம்.”
ஐயங்கார் சொல்லுகிறார், (இங்கிலீஷில்):— “இந்த ஆங்கிலேயரின் கேள்விகளை முதலாவது கவனியுங்கள். என் விஷயம் பிறகு நேரமிருந்தால் பார்த்துக் கொள்ளலாம்.“
அப்போது ஆங்கிலேயர் சொல்லுகிறார்:— “அவசியமில்லை. இருவரும் கேட்கலாம். மாற்றி மாற்றி இருவருக்கும் தராசு மறுமொழி சொன்னால் போதும்.“
“சரி, இஷ்டமானவர் கேட்கலாம்“ என்று தராசு சொல்லிற்று.
ஐயங்கார் பேசவில்லை. சும்மா இருந்தார். சில நிமிஷங்கள் பொறுத்திருந்து, ஆங்கிலேயர் கேட்டார்:— “ஐரோப்பாவிலே சண்டை எப்போது முடியும்?“
தராசு:— “தெரியாது“
ஆங்கிலேயர்:— “இந்த யுத்தம் முடிந்த பிறகு ஐரோப்பாவிலே என்ன மாறுதல்கள் தோன்றும்?“
தராசு:— “தொழிலாளிகளுக்கும், ஸ்திரீகளுக்கும் அதிக அதிகாரம் ஏற்படும். வியாபாரிகளுக்குக் கொஞ்சம் சிரமம் ஏற்படலாம். கிழக்குத் தேசத்து
44